மஹா சிவராத்திரி வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு பற்றிய விளக்கம்

6df6744c58b860c145dd56f05400466e-1

மஹா சிவராத்திரி அன்று இந்த உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுமே விடிய விடிய திறந்திருக்கும். உலகை காக்கும் பரம்பொருள் ஆன ஈசனை மகிழ்வித்து குளிர்விக்க செய்யப்படும் ஒரு விழாவே சிவராத்திரி விழாவாகும்.

இறைவனிடம் பொதுவாக பிரார்த்தனைக்கு வேண்டினால் நல்ல பலன் உண்டு. பிரார்த்தனைக்கு உள்ள பலன் நம்மிடம் வந்து சேர்ந்து நமக்கு நல்லவை நடப்பதால்தான் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கோவிலுக்கு தொடர்ந்து செல்கிறோம். 
நாம் ஒரு கோவில் செல்ல வேண்டும் என நினைக்கிறோம் உடனே சென்று விடுகிறோம். அதே நேரத்தில் நம் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்கள் எல்லோரும் நாம் கோவில் செல்லும் அதே நேரத்தில் கோவில் செல்ல வேண்டும் என்று நினைப்பார்களா அவரவருக்கு வேலையை பொறுத்து கோவில் செல்லும் சூழ்நிலைகள் இருக்கும்போதுதான் செல்வார்கள்.
ஆனால் சிவராத்திரி வழிபாடானது அனைவரும் ஒரே நேரத்தில் செய்வார்கள். உலகெங்கிலும் உள்ள சிறு பெறு கோவில்கள் என அனைத்து கோவில்களிலும், பூஜைகள், புனஸ்காரங்கள், மாலை மரியாதைகள், சந்தனம், ஊதுபத்தி வாசம் என சிவராத்திரி முழுக்க சுகந்தமாக களை கட்டி இருக்கும்.

கெட்ட அதிர்வலைகளை எதிர்த்து பாஸிட்டிவான நல்ல அதிர்வலைகளை பூமிக்கு கொண்டு வரும் நாள் இந்த நாள். எல்லா மக்களும் ஒட்டுமொத்தமாக தீயவை அழிந்து நல்லவை நடக்க வேண்டும் என விரும்பும் ஒரு நல்ல நாள்.
குலத்தை காப்பது குல தெய்வம். குல தெய்வ வழிபாடுதான் முதலில் மற்ற தெய்வங்கள் பிறகுதான் என்ற பொதுவான கருத்து உள்ளது. நமக்கு ஒன்று என்றால் நம்மை காக்க முயல்வது குலதெய்வமே ஆகும். அப்படி குலம் தழைத்தோங்க அனைவரும் சிவராத்திரி நாளில் குல தெய்வ வழிபாடு செய்வார்கள்.

குல தெய்வத்தை மறந்து வேலை வேலை என ஓடிக்கொண்டிருப்பவர்கள் குலதெய்வ வழிபாட்டை கண்டிப்பாக இந்த ஒரு நாளிலாவது செய்ய வேண்டும் அப்போதுதான் குலம் தழைத்தோங்கும்.
மேலும் அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால பூஜைகள் இரவு நடைபெறும் உலக நன்மைக்காக பூஜை நடக்கும்போது சிவபுராணம், கந்தபுராணம் என பக்தி பதிகங்களை பாடி இது போல விழாக்களில் கலந்துகொண்டால் இவ்வுலகத்துக்கு பெரிய நன்மை கிட்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews