கங்குவா முதல் ரிவ்யூ கொடுத்த பாடலாசிரியர் விவேகா.. இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என புகழாரம்!

இந்திய சினிமா அளவில் பெருமை மிகு பிரம்மாண்ட படங்களாக சந்திரலேகா முதல் சமீபத்தில் ரிலீஸ் ஆன கல்கி திரைப்படம் வரை பல நூறு திரைப்படங்கள் வெளிவந்து இந்திய சினிமாவின் தரத்தினை உலக அளவில் உயர்த்தியிருக்கிறது. இவற்றில் பாகுபலி, 2.0, போன்றவை கடந்த சில ஆண்டுகளில் நாம் பார்த்து வியந்தவை. ஹாலிவுட்டுக்கு நிகராக தரமான படங்களைக் கொடுத்து வருகின்றனர் இந்திய சினிமா இயக்குநர்கள். அந்த வகையில் அண்ணாத்த படத்திற்கு அடுத்த படியாக இயக்குநர் சிவாவின் பிரம்மாண்ட படைப்பு தான் கங்குவா.

நடிகர் சூர்யாவின் 43 -வது திரைப்படமாக உருவாகி வரும் கங்குவா வருகிற அக்டோபர் 10-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள கங்குவாவில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல்,யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, யுவி கிரியேசன்ஸ் ஆகியோர் இப்படத்தினைத் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட கதைக்களமாக கங்குவா படம் உருவாகியிருக்கிறது.

என்னை மாதிரி உனக்கும் நாமம் போடப்போறாங்க… சிவகுமாருக்கு கிலி உண்டாக்கிய சிவாஜி

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் ரிவ்யூவை வெளியிட்டிருக்கிறார் பாடலாசிரியர் விவேகா. இப்படத்தில் சில பாடல்களை எழுதியுள்ள விவேகா அண்மையில் படத்தினைப் பார்த்து அசந்து போய் தனது சமூக வலை தளப்பக்கத்தில் படம் குறித்த முதல் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், “கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம். இயக்குநர் சிவா நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு உச்சம்.. Feeling very proud to be a part of this great film.” என்று பதிவிட்டிருக்கிறார்.

கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சுமாரான வெற்றியையே பெற்றிருந்தது. எனினும் அடுத்து விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது பெரிதும் வரவேற்பினைப் பெற்றிருந்தது. கடந்த வருடம் எந்தப் படமும் வெளியாகாத நிலையில் தற்போது கங்குவா படத்தினை எதிர்நோக்கி சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...