செல்பி எடுக்க மட்டும் சினிமாக்காரங்க வேண்டுமா? வீடு தர மாட்டீங்களா? நடிகர் ஸ்ரீ காந்த் காட்டம்

தமிழில் ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி முன்னனி நடிகராக இருப்பவர் ஸ்ரீ காந்த். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். ஆக்சன் ஹீரோவாகவும், சாக்லேட் பாயாகவும் விளங்கிய ஸ்ரீகாந்த் ஜுட், நண்பன், சதுரங்கம், ஒரு நாள் ஒரு கனவு, பூ பார்த்திபன் கனவு போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் ஒரு சிறந்த பிளாக் பஸ்டர் வெற்றிப் படத்தினை ஸ்ரீ காந்த் தற்போது வரை தரவில்லை. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பேட்டி ஒன்றில் சினிமாக் காரர்களுக்கு இன்னும் வீடு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில், நான் வீடு வாடகைக்கு செல்ல முடிவெடுத்து ஒரு வீட்டினை பைனல் செய்து வைத்திருந்தேன். அந்த வீட்டினை நான் பார்க்கலாம் என்று சென்ற போது நான் சினிமாக்காரன் என்பதை அறிந்து வீடு கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்கள். இரண்டு வருடத்திற்கான வாடகையைக் கூட முன்பணமாகக் கொடுத்து விடுகிறேன் என்று கூறிய போது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மருத்துவமனையில் இருந்து ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்.. அப்ப அறுவை சிகிச்சை உண்மைதானா?

இப்போ கூடநின்னு செல்பி எடுத்துக்கத்தான் சினிமாக்காரன் வேணும்.ஸ்கூல், காலேஜ் விழாக்களுக்கு சினிமாக்காரன் வேண்டும். ஆனா வீட்டை மட்டும் சினிமாக்காரங்களுக்குத் தரமாட்டீங்களா என்று காரசாரமாகக் கூறியிருக்கிறார் நடிகர் ஸ்ரீ காந்த்.

பொதுவாகவே 2001 ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாவிற்கு வாய்ப்புத் தேடி வருவது அதிகரித்தது. அந்தக் காலகட்டத்தில் சென்னையில் நிறைய இடங்களில் சினிமா சான்ஸ் தேடுபவர்கள் என்றாலே வாடகை தரமாட்டார்கள், இழுத்தடிப்பார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்க வீட்டின் உரிமையாளர்கள் தயங்கினர். இதனால் அப்போதிருந்தே இந்தப் பிரச்சினை உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்துக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருப்பது கண்டு பேட்டியில் தெரிவித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews