கைதி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்.. இவ்வளவு கம்மியா? கைதி-2 அப்டேட்ஸ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வங்கி வேலையை விட்டுவிட்டு இயக்குனராக மாறியவர் தான் கோவையை சேர்ந்த லோகேஷ் கனகராஜ்.

WhatsApp Image 2023 06 21 at 10.02.34 PM 1

மாநகரம் படத்திற்கு பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 2019 தீபாவளிக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி ‌படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சாம் சி எஸ் இசையில் சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்து இருந்தார். பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றினார்.

WhatsApp Image 2023 06 21 at 10.03.19 PM 1

இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

மாஸ்டர் படத்தினை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 06 21 at 10.03.19 PM

லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் லியோ படத்தில் நடிக்கின்றனர்‌.

லியோ படத்தினை அடுத்து லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்திற்காக 30 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் முடிந்த பிறகு கைதி-2 படத்தின் வேலைகள் துவங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...