ஷாருக்கான் மட்டுமில்லை!.. இன்னொரு பாலிவுட் ஹீரோவையும் இறக்கப் போறாராம் லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் முன்னேறி அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கப் போகிறார்.

கடந்த ஆண்டு குருநாதர் கமல்ஹாசனுக்கு விக்ரம் எனும் வெறித்தனமான இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த ஆண்டு விஜய்க்கு முதல் முறையாக அப்படி ஒரு சம்பவத்தை லியோ படத்தின் மூலம் செய்துள்ளார்.

தாறுமாறு செய்யப்போகும் தலைவர் 171

இதுவரை அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் அதிகபட்சமாக 300 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படமும் 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருந்தது. ஆனால் ஆயுத பூஜைக்கு ரிலீஸான லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் முதல் முறையாக 600 கோடி ரூபாய் வசூலை நடிகர் விஜய்க்கு சாத்தியமாக்கியது.

அடுத்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படத்தை தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமே 600 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருந்தது.

ஷாருக்கான், ரன்வீர் சிங்கை இறக்க லோகி திட்டம்

நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு பக்கபலமாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார், தெலுங்கு நடிகரான சுனில் மற்றும் பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதே மேஜிக்கை தலைவர் 170 படமான வேட்டையன் படத்திலும் கொடுப்பதற்காக இயக்குனர் ஞானவேல் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், கோலிவுட் நடிகர் ராணா டகுபதி மற்றும் நடிகைகள் மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மல்டி ஸ்டாரர்களை இறக்கியுள்ளார்.

1000 கோடி வசூல் கன்ஃபார்ம்

தலைவர் 171 வது படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ரன்வீர் சிங் உள்ளிட்டோருடன் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான் தலைவர் ரஜினிக்காக லுங்கி டான்ஸ் பாடலை வைத்திருந்தார். மேலும், ரா ஒன் படத்தில் ரஜினிகாந்தின் கேமியோ ரோல் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், ஷாருக்கான் தலைவர் 171 படத்தில் நடித்தால் தாறுமாறாக இருக்கும் என்றும் தீபிகா படு்கொனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சி்ங்கும் காட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.