படத்தோட கதையே அந்த சீன் தான்!.. தயாரிப்பாளரிடம் சண்டையிட்டு லிவிங்ஸ்டன் நடித்த படம்!..

தமிழ் சினிமாவின் எத்தனையோ பேர் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் சூழ்நிலைக்கேற்ப ஹீரோவாக மாறி விடுகின்றனர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் நுழைந்தவர் தான் லிவிங்ஸ்டன். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

பின்னர் பாக்கியராஜ் ”பூந்தோட்ட காவல்காரன்” படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பில் பட்டையை கிளப்பியதால் தொடர்ச்சியாக அவருக்கு ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெளியாகி இவரேல்லாம் ஒரு ஹீரோவா என்று விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து தன்னுடைய தனி திறமையை மூலம் நானும் சிறந்த நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் லிவிங்ஸ்டன்.

அவர் நடிப்பிற்கு தீனிப்போடும் விதமாக ”சொல்லாமலே” படம் அமைந்தது. இதில் கதைப்படி ஹீரோ வாய் பேச முடியாதது ஊமைப்போல் நடித்திருப்பார். ஹீரோயினும் அதை உண்மை என நம்பி ஹீரோவுடன் பழகி வருவார். படத்தில் ஹீரோயின் கௌசல்யாவிற்கு தன்னிடம் பழகுவோர் பொய் சொன்னாலும் ஏமாற்றினாலும் அவருக்கு பிடிக்காது. ஒரு நாள் கௌசல்யாவிற்கு உண்மை தெரிய வர அவரை வெறுத்து ஒதுக்கி வைக்கிறார். பின்னர் கௌசல்யாவிற்கு அதற்கான காரணம் தெரியவரும் போது லிவிங்ஸ்டனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

அதற்க்குள் லிவிங்ஸ்டன் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துமனைக்கு சென்று கத்தியால் தன் நாக்கை அவரே வெட்டி விடுகிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக அமைந்திருக்கும். இப்படத்தில் படம் முழுக்க ஊமை போல் நடித்து பலரது கவனத்தையும் பெற்றார். அது மட்டுமின்றி படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சோகமாக இருப்பதால் முதலில் இப்படத்தின் தயாரிப்பாளரான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.பி.சவுத்திரிக்கு பிடிக்கவில்லை.

அவர் இந்த கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு திருப்தியை அளிக்காது. ஆகையால் பாக்யராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் சந்தோஷமாக முடிக்க சொல்லி இருக்கிறார். ஆனால் லிவிங்ஸ்டிலன் இயக்குனர் சசியிடமும் தயாரிப்பாளர் ஆ.ர்.பி சவுத்ரியிடமும் கெஞ்சி கூத்தாடி இதுதான் சார் கிளைமேக்ஸ் இதை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படியே கிளைமாக்ஸ் காட்சி மாற்றாமல் கதைப்படி அப்படியே எடுக்கப்பட்டது படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews