நேந்திரம் பழத்தின் நன்மைகள் இவைகளா?
 

நேந்திரம் பழம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது என்னவோ நேந்திரம் சிப்ஸ். இத்தகைய நேந்திரம் பழத்தின் நன்மைகள் ஏராளம்.

 
நேந்திரம் பழத்தின் நன்மைகள் இவைகளா?

நேந்திரம் பழம் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்கின்றது. 

மேலும் உடல் பலவீனமாக இருப்பவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், உடல் மெலிந்து இருப்போர் ஆகியோர் நேந்திரம் பழத்தினை தினமும் எடுத்து வந்தால் உடல் எடை நிச்சயம் கூடும்.

குழந்தைகளுக்கு 6 மாதங்கள் முதல் உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது நேந்திரம் பழத்தினை வேகவைத்து நெய் சேர்த்துக் கொடுத்தால் குண்டாவார்கள்.

மேலும் இது ஞாபக சக்தியினை அதிகரிப்பதாகவும், உடலினை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுவதாகவும் உள்ளது.

அதேபோல் இருமல் பிரச்சினை இருப்பவர்கள் நேந்திரம் பழத்தினை பாலுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால் நிரந்தரத் தீர்வினைப் பெறலாம்.

இரும்புச் சத்து குறைபாட்டு நோயான இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தினை தொடர்ந்து எடுத்து வரவேண்டும்.

மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுப்பதாய் நேந்திரம் பழமானது இருந்துவருகின்றது.

மேலும் காசநோய் பிரச்சினை உள்ளவர்கள் நேந்திரம் பழத்தினை சாப்பிட்டு வரும்பட்சத்தில் விரைவில் நலம் பெறுவர்.
 

From around the web