லியோ டிக்கெட் புக்கிங் ஆரம்பம்.. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் அசத்தப் போகுதாம்..!

வெளிநாடுகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே லியோ படத்தின் டிக்கெட்டுகள் விற்பனையாக தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் ஜெயிலர் பழத்தின் டிக்கெட் வசூலை விட அதிக வசூலை ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் சில திரையரங்குகள் தொடங்கியுள்ளன. தயாரிப்பாளர்கள் லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த வாரம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீசாகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் லியோ ரிலீஸ்:

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக கே ஜி எஃப் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும், நடிகர் அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் வில்லன் கேங்கில் நடித்துள்ளனர்.

பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இரு கதாபாத்திரங்களில் இந்த படத்தில் விஜய் காணப்படுகிறார். ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் ரீமிக்ஸ் என்றால் இருவரும் ஒரே ஆள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யாருக்கு என்ன ரோல்:

பார்த்திபன் விஜய்க்கு நண்பராக கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக பிரியா ஆணும் நடித்துள்ளார். நடிகர் விஜய்க்கு மகனாக மலையாள இளம் ஹீரோ மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். மகளாக நகைச்சுவை நடிகர் அர்ஜுனனின் மகள் இயல் நடித்துள்ளார். நேற்று வெளியான மூன்றாவது சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண் குரலிலும் அனிருத் பாடி விட்டாரா என்கிற ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

டிக்கெட் விற்பனை ஆரம்பம்:

வெளிநாடுகளில் லியோ படத்தின் டிக்கெட் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகும் என்கிற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல கேஜி திரையரங்கம் இன்று முதல் லியோ படத்துக்கான முன்பதிவை தொடங்கி உள்ளது. நடிகர் விஜய் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

ஐமேக்ஸில் லியோ:

லியோ படத்திற்கு மதுரை பிரியா சினிமாஸ் பெயரில் போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக பரபரப்பு கிளம்பிய நிலையில், டிக்கெட்டுகளை தியேட்டருக்குச் சென்றும் சரியான ஆன்லைனில் செக் செய்தும் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய்யின் லியோ படமும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் உலகம் முழுவதும் உள்ள ஐமேக்ஸ் ஸ்க்ரீன்களில் வெளியாக உள்ளதாக செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...