பொய்யான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சொல்லி எனக்கு என்ன யூஸ்?.. கொந்தளித்த லியோ தயாரிப்பாளர்!..

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் ரிலீசுக்கு முன்பு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை அடைந்த நிலையிலும், இன்னமும் பல பிரச்சனைகளை தினமும் சந்தித்து வருகிறார்.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வரை வசூல் ஈட்டியதாக சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில், அனைவரும் அதனை ஒப்புக் கொண்டு கொண்டாடினர்.

தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி

ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டும் அவங்க சொல்றது எல்லாம் பொய் லியோ படுதோல்வி படம் என பல சினிமா பிரபலங்களே யூடியூப் களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வந்த நிலையில், கடுப்பான லலித் குமார் தனது விளக்கத்தை கொடுக்க அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஐமேக்ஸ் தான் வசூலுக்கு காரணம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான லியோ ஏழு நாட்களில் 461 கோடி ரூபாயை ஈட்டி இருப்பது உண்மையான தகவல் என்றும், பொய்யான நம்பர் சொன்னால் தனக்குத்தான் சிக்கல் ஏற்படும் என்றும் ஐமேக்ஸ் தியேட்டரில் படத்தை வெளியிட்ட நிலையில் மட்டுமே 40 கோடி வசூலை லியோ எட்டி இருப்பதாகவும் வரும் காலங்களில் தமிழ் சினிமா படங்கள் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டால் அதன் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் எப்படி முதல் நாளில் அதிக வசூல் சாதனையை லியோ படைத்தது என்பதற்கான விளக்கத்தையும் தயாரிப்பாளர் லலித் குமார் தெளிவுபடுத்தி உள்ளார்.

தனஞ்செயன், திருப்பூர் சுப்பிரமணியம் பொய் சொல்றாங்க

மேலும், தனக்கு எதிராக தனஞ்செயன் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் ஏன் இப்படி பேசுகின்றனர் என்பதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.

நடிகர் ஜெய்யை வைத்து படத்தை உருவாக்கி வரும் தனஞ்செயன் அந்தப் படத்தை என்னிடம் கொடுத்து ரிலீஸ் செய்ய சொல்லி இருந்தார். நான் இப்போதைக்கு முடியாது எனக் கூறிய நிலையில் தான் இப்படி எல்லாம் பேட்டி கொடுத்து அசிங்கப்படுத்தி வருகிறார் என்றார்.

மேலும், திருப்பூர் சுப்பிரமணியம் சொல்வது முற்றிலும் பொய் எந்த தியேட்டரிலும் 80 சதவீதம் ஷேர் கேட்கவே இல்லை. வாரிசு படத்துக்கு எந்த அளவுக்கு பேசப்பட்டது அதே அளவு ஷேர் தான் லியோ படத்திற்கும் பேசப்பட்டது என அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...