ஹீரோக்களுக்கு இணையாக போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்டிய முன்னணி ஹீரோயின்கள் !

பொதுவாக திரைப்படங்களில் ஹீரோக்களுக்குத் தான் மாஸான சீன்களும், அதிரடியான காட்சிகளும் இருக்கும். ஆனால் இந்த வழக்கங்கள் தற்பொழுது மாற தொடங்கியுள்ளது. முன்னணி கதாநாயகிகள் தற்பொழுது பெண்களை மையப்படுத்தும் கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் காவல் அதிகாரியாக நடித்த முன்னணி ஹீரோயின்கள் லிஸ்ட் இதோ!

நயன்தாரா

தென்னிந்திய ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா போலீஸ் அதிகாரியாக திரையில் நடித்த முதல் படம் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நேர்மையான சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.

அடுத்ததாக ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா . இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா படத்தில் காவல் அதிகாரியாக களமிறங்கியுள்ளார். ‘ஜவான்’ டிரெய்லரில் இருந்து நயன்தாராவின் மிடுக்கான தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜோதிகா

நடிகை ஜோதிகா இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து ‘நாச்சியார்’ படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் விடாமுயற்சியுடன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியிருப்பார். ஏழை எளிய அப்பாவிகளுக்கு நீதி கிடைப்பதற்காக தவறு செய்பவர்களுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி

நயன்தாராவுக்கு முன், பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் முன்னோடியாக இருந்தவர் அனுஷ்கா ஷெட்டி. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்த முதல் படம் ‘பாகமதி’.இப்படத்தில் சஞ்சலா ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

பிக்பாஸ் – 7 நிகழ்ச்சிக்காக கமல் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அமலா பால்

தளபதி விஜய் நடித்த ‘தலைவா’ படத்தில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அமலா பால் சாதாரண மக்களோடு மக்களாக தலைமறைவாக இருந்தாலும், படத்தின் திருப்பம் நன்றாக அமைந்தது. தலைவா படத்திற்குப் பிறகு, ‘யு-டர்ன்’ புகழ் இயக்குனர் பவன் குமார் இயக்கிய ‘குடி எடமைதே’ என்ற அறிவியல் புனைகதை வலைத் தொடரில் அவர் கடினமான காவலராக நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘சாணி காகிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். சாதி வெறி பிடித்த முதலாளியால் தன் கற்பையும், கணவன், குழந்தையையும் பறி கொடுத்த கீர்த்தி, அண்ணன் செல்வராகவனுடன் சேர்ந்து எப்படி பழி தீர்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...