பொங்கல் ரேஸில் இருந்து விலகும் லால் சலாம் திரைப்படம்! இது ஒரு காரணமா?

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் விசேஷ நாட்களில் வெளியாவது வழக்கம். பொதுவாக தீபாவளி, பொங்கல் நாட்களில் மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்தும். மேலும் ஒரே நாளில் இரண்டு மூன்று ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய போட்டியையும் சர்ச்சையும் ஏற்படுத்துவதும் இன்றைய சினிமாவில் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலை முன்னிட்டு முன்னணி நடிகர்களான தளபதி விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அடுத்த பொங்கலை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த போட்டியில் ஒரு சில திரைப்படங்கள் விலகி உள்ளது. இது குறித்த முழு தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியா மோகன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால் இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து சில காரணங்களால் தள்ளப்பட்டு சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாகவும் உறுதியான கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை எனவும் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது இந்த படத்தில் டிஜிட்டல் உரிமை இன்னும் விற்பனையாக வில்லை என்றும் படத்தின் சாட்டிலைட் உரிமம் இந்த வாரத்தில் தான் அதற்கான பிசினஸ் முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் செய்த கமல்! தக் லைஃப் படத்தில் இப்படி ஒரு ரணகளமா?

மேலும் லால் சலாம் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமமும் வேட்டையன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சாட்டிலைட் உரிமம் மற்றும் விற்பனையான நிலையில் இன்னும் டிஜிட்டல் உரிமம் விற்பனையாகாத காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சில நாட்கள் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பொங்கல் ரேசில் அரண்மனை 4 திரைப்படம் முன்னதாக வெளியாவதாக இருந்து அதன் பின் இந்த படத்தின் தொழில்நுட்ப வேலைகள் முடியாத காரணத்தினால் ரிலீஸ் தேதியிலிருந்து தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.