லால் சலாம் டிரெய்லர் தாறுமாறா இருக்கே!.. பஞ்ச் டயலாக், ஸ்டைல் கத்தி என மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், தொழில்நுட்ப காரணமாக 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசியாக 9.30 மணிக்குத்தான் லால் சலாம் டிரெய்லர் வெளியானது.

விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமைய்யா, தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தின் டிரெய்லர் கொல மாஸாக உள்ளது.

லால் சலாம் டிரெய்லர் ரிலீஸ்:

3 மற்றும் வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் இயக்கத்தில் டச் விடாமல் பக்காவாகவே இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பது டிரெய்லரை பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது.

விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவருக்கும் இடையே கிரிக்கெட்டில் மோதல் ஏற்படுகிறது. ஊருக்குள்ளும் இந்து, முஸ்லீம் பிரச்சனை வெடிக்கிறது.

விக்ராந்தின் தந்தை மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் வருகிறார். சாமானியர் இஸ்லாமியர் இல்லை. அவர், மும்பையில் எவ்வளவு பெரிய பாய் தெரியுமா? என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டுடன் வெளியாகி உள்ள டிரெய்லரில் ஒவ்வொரு சீனும் தாறுமாறாக உள்ளது.

வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ள லால் சலாம் படம் ஜெயிலர் படத்தை போல மிகப்பெரிய வெற்றியை பெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு வசூலிக்க ரஜினிகாந்த் ஒருவர் படத்தில் இருப்பதே போதும் என்றும் கூறுகின்றனர் . பொங்கலுக்கு வெளியான தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் 100 கோடி வசூலை எட்டாத நிலையில், லால் சலாம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குநராக வெற்றி பெறுவாரா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். லால் சலாம் படத்துக்குப் போட்டியாக மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ ஸ்டார் படத்தை தொடர்ந்து இந்த படமும் கிரிக்கெட் மற்றும் அரசியலை வைத்து வெளியாக உள்ள நிலையில், எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பதை காண ரஜினிகாந்த் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.