இனிமே இப்படித்தான்!.. அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால்!..

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் 2009ல் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி சூரிக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி என கிராமத்து சப்ஜெக்ட் படங்களின் நடித்து வந்த விஷ்ணு விஷால் ஜீவா படத்தில் கிரிக்கெட் ஆகவும், இன்று நேற்று நாளை எனும் சயின்ஸ் பிக்சன் படத்திலும் நடித்திருந்தார்.

ராம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு எப்படி ஒரு தனி ஒருவன் படம் அமைந்தது அதேபோல விஷ்ணு விஷாலுக்கு ஒரு ஆக்சன் பேக்ட் சைக்கோ திரில்லர் படமாக அமைந்தது.

அந்த படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் ரேஞ்ச் மாறும் என தமிழ் சினிமாவை எதிர்பாத்த நிலையில், முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்து பிரியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட விஷ்ணு விஷால் குடி போதைக்கு அடிமையாகி ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போனார்.

ரஜினி படத்தில் ஹீரோ:

மீண்டும் அவர் தனது கெட்ட பழக்கத்தை எல்லாம் விட்டுவிட்டு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்ய ஆரம்பித்து உடல் எடையை வெகுவாக குறைத்து ஃபிட்டாக மாறினார்.

அதன் பின்னர் அவர் நடிப்பின் வெளியான எஃப்ஐஆர், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால்:

கடந்த வாரம் வெளியான லால் சலாம் திரைப்படம் பிளாக்பஸ்டர் என லைகா நிறுவனம் அறிவித்து வரும் நிலையில், இதுதான் சரியான நேரம் என விதைத்த விஷ்ணு விஷால் தனது சம்பளத்தை அதிரடியாக எட்டு கோடி ரூபாய் வரை உயர்த்தி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான மோகன்தாஸ் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் உள்ள நிலையில். அடுத்து ஆரியன் என்னும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

பாலிவுட் வரை இவருக்கு செல்வாக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் இந்தி நடிகர் அனில் கபூர் இவரை சந்தித்த புகைப்படங்களும் வைரலாகின. லால் சலாம் திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே வெறும் 10 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளது. ஆனால், அதற்குள் விஷ்ணு விஷால் இப்படி மனசாட்சி இல்லாமல் தனது சம்பளத்தை எட்டு கோடி ரூபாய் வரை உயர்த்தி விட்டாரே என்றும் கோலிவுட்டில் சில தயாரிப்பாளர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews