ரோஹித், கோலிக்கே இப்டி ஒரு பரிதாபமா.. ஐசிசி தொடரில் மோசமான சாதனை பட்டியலில் இருக்கும் இரண்டே இந்திய வீரர்கள்..

தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான இரண்டு நட்சத்திர வீரர்கள் என்றால் நிச்சயம் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா தான். தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்திய அணியின் கேப்டன் ஆகும் வாய்ப்பு கோலிக்கு கிடைத்திருந்த நிலையில் அதன் பின்னர் அவரைத் தொடர்ந்து தற்போது ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

பல சீனியர் வீரர்கள் மற்றும் அனுபவமே இல்லாத இளம் வீரர்கள் வரை இவர்களுடன் இணைந்து நல்ல திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பற்றி பேசிய பல இளம் வீரர்களும் அவர் எப்படிப்பட்ட வீரராக இருந்தாலும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அருமையாக பழகி அணியில் உள்ளவர்களின் திறன் என்ன என்பதை வெளிக்கொணர்ந்து வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அப்படி தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முகமாக இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக அரைச்சதம் அடித்து அசத்தி இருந்த ரோஹித் ஷர்மா, அடுத்த இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.

இன்னொரு பக்கம் விராட் கோலி 3 போட்டிகளில் சேர்த்து ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக கோல்டன் டக்கானது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்திருந்தது. கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இந்தமுறை டி20 உலக கோப்பையை எப்படியாவது வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அப்படி அவர்கள் இருக்கும் போது அணியின் தலைச்சிறந்த வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஃபார்மில் இல்லாமல் போனால் நிச்சயம் அது பின்னடைவாக தான் இருக்கும். இதனால் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி நிச்சயம் அனைத்து விஷயங்களையும் சரி செய்து கொண்டு இன்னும் அதிக கவனத்துடன் ஆட வேண்டும்.

அப்படி ஒரு சூழலில் தான் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இணைந்து மிக மோசமான சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி தொடர்களிலும் இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் தான் டக் அவுட்டாகி உள்ளனர்.

அந்த இரண்டு பேரும் ரோஹித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் தான். இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டிய இருவரும் இப்படி ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகி இருப்பதால் நிச்சயம் வரும் போட்டிகளில் நன்றாக ஆடி அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...