கம்பீர் இந்தியாவுக்கு கோச்சா வந்தா இதான் நடக்கும்.. கோலி, ரோஹித்திற்கு காத்திருக்கும் பெரிய ஆப்பு…

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருபவர் ராகுல் டிராவிட். சில முக்கிய ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் பயிற்சியாளராய் டிராவிட் இருந்த போதிலும் சில காரணங்களால் அதனை வெல்ல முடியாமல் போயிருந்தது. இதனைத் தொடர்ந்து இவரது பதவி காலம் முடிவுக்கு வந்த பிறகும் அதனை நீட்டித்து அவர் டி20 உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அப்படி இருக்க, டி20 உலக கோப்பையின் சூப்பர் 8 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருந்து வரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இரண்டு முறை கேப்டனாக கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துடுள்ள கம்பீர், இந்த சீசனில் ஆலோசகராக இணைந்து அவர்கள் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லவும் உதவி இருந்தார். அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் பாகுபாடு இல்லாமல் ஒரே போன்று பார்க்கும் கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தி ஐசிசி கோப்பைகளை வெல்வதற்கும் வழி வகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே வேளையில் அணிக்குள் நிறைய மாற்றங்களை பொருத்துவதற்கான முயற்சிகளிலும் அவர் இறங்குவார் என்பதால் எப்படிப்பட்ட விஷயமாக அது இருக்கும் என்பதிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் என்ன மாற்றங்களை செய்வார் என்பது பற்றி முன்னாள் வீரரும், கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“கம்பீர் மற்றும் டபுள்யூ சி ராமன் ஆகியோர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலில் கலந்து கொண்டதாக நான் கேள்விபட்டேன். இதில் கம்பீர் தான் தற்போது முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. அப்படி கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் காலங்கள் நிச்சயம் சுவாரஸ்யம் நிறைந்து தான் இருக்கப் போகிறது.

ஏனென்றால் அணியில் நிறைய மாற்றங்கள் நிகழும். அவை எளிதான விஷயமாகவும் இருக்காது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலர் டி 20 அணியில் இடம்பெறுவது முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் இவர்கள் அனைவரும் இப்போது முதல் 30 முதல் 37 வயதுக்குள் இருக்கிறார்கள். இதில் நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டிய அவசியம் உள்ளது” என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...