17 வருஷம் கழிச்சு.. டி 20 உலக கோப்பைத் தொடரில் பேட் கம்மின்ஸ் படைச்ச சரித்திரம்..

சூப்பர் 8 சுற்று போட்டிகள் டி20 உலக கோப்பைத் தொடரில் ஆரம்பமான நாள் முதல் மிக விறுவிறுப்பாக தான் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள்ளே போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை மொத்தமாக நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அனைத்து அணிகளும் ஒரு போட்டி ஆடி முடித்திருந்த நிலையில் குரூப் ஒன்றில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தையும் இந்திய அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இதில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தோல்வியடைந்துள்ளது. மற்றொரு குரூப்பில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இவர்களைத் தவிர வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் தோல்வியடைந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

மொத்தம் நான்கு அணிகள் ஒரு பிரிவில் இடம் பெற்றிருப்பதால் ஒவ்வொரு போட்டியின் முடிவுகளின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இடங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இதனால் அரை இறுதிக்கு யார் முன்னேறுவார்கள் என்பதை மிகப் பெரிய ட்விஸ்டாக இருக்கும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான வாய்ப்பும் அவர்களின் பிரிவில் அதிகம் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் தான் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சாளர்கள் மிகக் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட் எடுத்ததால் பெரிய அளவில் பங்களாதேஷ் அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை.

இந்த போட்டியில் அவ்வப்போது மழை குறுக்கிட்டு வந்த நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 11. 2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடைய மேலும் இந்த போட்டியில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பேட் கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருதினை வென்றிருந்தார். அப்படி இருக்கையில் அவர் ஹாட்ரிக் மூலம் இந்த விக்கெட்டுகளை வீழ்த்த, மிக முக்கியமான சாதனையை 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பைத் தொடரில் படைத்துள்ளார்.

மஹ்மதுல்லா, மெஹதி ஹாசன் மற்றும் ஹிருதாய் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றியிருந்த பேட் கம்மின்ஸ், டி20 உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்பு முதல் டி20 உலக கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் ப்ரெட் லீ இதே வங்காளதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்திருந்தார்.

அவருக்கு பின் 17 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக டி 20 உலக கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த 7 வது பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் பேட் கம்மின்ஸ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...