கோடிகளில் புரளும் கீர்த்தி சுரேஷ்! அதற்காக இப்படியா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகருடன் பல படங்களில் இணைந்து நடித்து திரைத்துறையில் சாதனை படைத்து வருகிறார். தனது குழந்தை தனமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடிக்க தொடங்கினார், அதை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் பைரவா,விக்ராமுடன் சாமி 2 , தனுஷுடன் தொடரி, ரஜினியுடன் அண்ணாத்த என பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து கலக்கி உள்ளார்.

சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாளிலே சாவித்திரி படத்திற்காக தேசிய விருது பெற்ற பெருமையும் இவருக்கு உள்ளது. மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களை அதிகமாக தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் சாணிக்காகிதம் திரைப்படம் அவரது வித்தியாசமான நடிப்பிற்கு ஒரு சிறந்த சான்றாக அமைந்தது.

அதை தொடர்ந்து தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

லியோ படத்தில் இத்தனை பிரபலங்களா.. படத்தில் கேமியோ ரோல் தான் விஜய்க்கா?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த படத்தில் சமந்தாவிற்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் இடம் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் சலசலக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் கீர்த்தி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 2 கோடி சம்பளம் வாங்கிவந்த அவர் தற்பொழுது 3 கோடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...