அடிச்சது லக்… மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் கீர்த்தி சுரேஷ்….

நடிகையர் திலகம் என்று அழைப்படுகிற சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது.

மிகவும் வரவேற்பினைப் பெற்ற இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தை உள்வாங்கி அப்படியே நடித்து இருப்பார். ஒவ்வொரு சீனிலும் கீர்த்தி சுரேஷ் என்பதை மறந்து சாவித்திரியாகவே பலரும் பார்த்தனர்.

f81bf5bcea78610fc7516e034296bcb7

மகாநதி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். கீர்த்தியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்த அந்த பயோகிராபிக் படத்தையடுத்து, கீர்த்தி சுரேஷ் மீண்டும் மற்றொரு நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதாவது நடிகை விஜய நிர்மலாவின் வரலாற்று தொடர்பான படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  விஜய நிர்மலா, ஒரு நடிகை என்பதைத் தாண்டி, உலகிலேயே 42 படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்ற சாதனையையும் படைத்தவர்.

இவரது கதாபாத்திரத்திற்கு கீர்த்தியே பொருத்தமானவராக இருப்பார் என்பதால் இவரைத் தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews