பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவளித்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள்!.. கமலுக்கு எதிராக குவியும் கண்டனங்கள்!

பிக் பாஸ் சீசன் ஏழு நிகழ்ச்சி ஜோதிகா விசித்ராவின் முதல் வாரம் சண்டைக்குப் பிறகு மீண்டும் தற்போது சூடு பிடித்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் செம போரா போய்க்கொண்டிருந்த நிலையில் பிரதீப் ஆண்டனியை அதிரடியாக ரெக்கார்டு கொடுத்து கமல்ஹாசன் வெளியேற்றி உள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் அதற்காகவே பிரதீப் ஆண்டனியை வெளியேற்றுகிறான் என கமல்ஹாசன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நிலையில், அதற்கு எதிராக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிரதீப் ஆண்டனியின் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் கொந்தளித்து உள்ளனர்.

வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என போட்டியாளர்கள் செங்கொடி ஏந்திய நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ் டீம் உடன் கலந்து ஆலோசித்து இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டார்.

பிரதீப்பை பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் யார் என்று தெரியும் என நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ஆன கவின் பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் மட்டுமின்றி கமல்ஹாசனின் தீவிர ரசிகரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சினேகன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

முன்னாள் போட்டியாளர்கள் ஆதரவு

மேலும் இது அன்ஃபேர் எவிக்ஷன் பிரதீப்பை வெளியேற்றியது தவறு என பிரியங்கா தேஷ்பாண்டே, பாவனி ரெட்டி, நிவாஷினி, நிரூப் உள்ளிட்ட முன்னாள் போட்டியாளர்கள் பலரும் தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ளனர்.

பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், இனிமேல் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என அவரது ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிதான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிரடியாக அவர் வெளியேற்றப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா, மூன்றாவது சீசனில் நடிகர் கவின், ஐந்தாவது சீசனில் சனம் செட்டி உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவது கூட ரசிகர்கள் இதே மனநிலையுடன் நிகழ்ச்சியை எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடுத்த வாரமே ஒரு பரபரப்பை பற்ற வைத்து மீண்டும் ரசிகர்களை பிக் பாஸ் பக்கம் எப்படி திருப்ப வேண்டும் என்கிற வித்தை விஜய் டிவிக்கு நன்றாகவே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே வந்த பிரதீப் ஆண்டனி தான் செய்தது தவறு என்று தெரியாமலே செய்து விட்டதாகவும், யார் மீதும் வருத்தம் இல்லை என்றும் கிடைத்த பெரிய வாய்ப்பையும் மக்களின் அன்பையும் மிஸ் செய்து விட்டதாகவும் வருந்தியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...