லேடி கெட்டப்புல ரெமோ சிவகார்த்திகேயனுக்கே டஃப் கொடுக்கிறாரே!.. கும்தலக்கடி கும்மாவா செம குத்தாட்டம்!

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் வீடியோ பாடல்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி ரசிகர்களை படத்தை பார்க்க தியேட்டருக்கு வரவழைக்கும் யுக்தியாக மாறி வருகிறது.

பாலிவுட்டில் ஷாருக்கான் படங்கள் எல்லாம் தியேட்டரில் வெளியாகும் முன்பே வீடியோ பாடலாக வெளியாகி விடும். முன்பெல்லாம் தமிழ் சினிமாவிலும் இந்த டெக்னிக் பயன்படுத்தப்பட்ட வந்தது.

லேடி கெட்டப்பில் கவின் டான்ஸ்:

ஆனால், லிரிக் வீடியோக்கள் வெளியான பின்னர், வீடியோ பாடல்கள் லிரிக் வீடியோவில் கொஞ்சமாக வெளியாகி ஹைப்பை கிளப்பும். யுவன் சங்கர் ராஜா இசையில் மெலடி பாடல் இன்று மாலை வெளியாக போகிறது என்கிற அறிவிப்பு முன்னதாக வெளியானது.

மேலும், மெலடி பாடலில் நடித்துள்ள கனவுக்கன்னி யார் என பேக் போஸ் மட்டும் காட்டி ரசிகர்களிடம் ரியாக்‌ஷன் வாங்கிய வீடியோவையும் படக்குழு ரிலீஸ் செய்தது. அப்போதே கவின் தான் பெண் வேடம் இட்டு நடித்திருப்பார் என ரசிகர்கள் இந்த ரெமோ காலத்து டெக்னிக்கை எல்லாம் கண்டு பிடித்து விட்டனர். அதே போல தற்போது கவின் முதன் முதலாக பெண் வேடமிட்டு நடனமாடியுள்ள பாடலாக மெலோடி வெளியாகி இருக்கிறது.

கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு கவர்ச்சி உடையில் ரெமோ சிவகார்த்திகேயனுக்கே டஃப் கொடுக்கும் விதமாக வந்த கவின் சாண்டி மாஸ்டர் கொரியோகிராஃபியில் “கும்தலக்கடி கும்மாவா மெலோடின்னா சும்மாவா” என யாரும் எதிர்பார்க்காத வகையில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு தாறுமாறான குத்து பாடலாக வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது.

பெண் வேடம் போட்டுக் கொண்டு ஆண் ஆடுவது போல செம குத்து குத்தி கவின் ஆடியிருப்பதை பார்த்து பெண் ரசிகைகள் எல்லாம் அறண்டு போய் விட்டனர்.

நிச்சயம் ஸ்டார் படத்தின் ஹைலைட்டாக இந்த பாடல் இருக்கும் என்பது இப்போதே தெளிவாகி விட்டது. ஆனால், இதையெல்லாம் சர்ப்ரைஸாக தியேட்டரில் வைத்து ரசிகர்கள் புரமோட் செய்திருந்தால் இன்னமும் நல்லா இருந்திருக்கும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் மே 10ம் தேதி வெளியாகவுள்ள கவினின் ஸ்டார் படத்துக்கு போட்டியாக சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews