மாயமான அபிராமியை தேடி அலையும் கார்த்திக்… விறுவிறுப்பான கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் சொத்தை பிரித்துக் கேட்டு சண்டையிடுகிறான். கார்த்திக் அவனை சமாதானம் படுத்துகிறான். ஆனால் யார் கூறுவதையும் கேக்காத ஆனந்த் எனக்கான சொத்தை பிரித்து தராவிட்டால் நான் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து சொத்தை பிரித்து விடுவேன் என்று கூறிவிட்டு செல்கிறான்.

இதைக் கேட்ட அபிராமி மனமுடைந்து போகிறாள். வீட்டிற்கு மூத்த மகனே என் தலையில் இப்படி நெருப்பை அள்ளி கொட்டிவிட்டானே நான் என்ன செய்வது என்று அண்ணாமலையிடம் அழுது கதறுகிறாள். அண்ணாமலை அவருக்கு ஆறுதல் கூறுகிறார். இப்படி அழுத்திட்டே இருந்தால் உடம்பு சரியில்லாமல் போய்விடும் என்றுக் கூறி அபிராமியை சமாதானப்படுத்தி தூங்க சொல்கிறார். அதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது.

இன்றைய எபிசோடில் இனி என்ன நடக்கிறது என்பதைக் காணலாம். காலையில் அண்ணாமலை எழுந்துப் பார்க்கிறார். பக்கத்தில் அபிராமியை காணவில்லை. பின்பு வீடு முழுவதும் தேடிப் பார்க்கிறார். எங்கேயும் அபிராமி இல்லை. கார்த்திக் ரூமிற்கு சென்று கார்த்தியை எழுப்பி விஷயத்தைக் கூறுகிறார்.

அதற்கு கார்த்திக் நீங்க நல்லா தேடியிருக்கமாடீங்க, நான் தேடி பார்க்கிறேன். அப்படி அம்மா வீட்டில் இல்லையென்றால் எதாவது கோவிலுக்கு போயிருப்பாங்க நீங்க கவலைபடாமல் இருங்க அப்பா என்று அண்ணாமலையிடம் கூறுகிறான்.

பின்னர் கார்த்திக் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அபிராமியை தேடிச் செல்கிறான். அபிராமி வழக்கமாக செல்லும் கோவில்களில் எல்லாம் போய் தேடுகிறான். ஆனால் அபிராமியை கார்த்தியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கார்த்திக் மிகவும் பதட்டமடைகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணாதவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...