Karthigai Deepam: அபிராமி பற்றி கார்த்திக்கு கிடைக்கும் தகவல்… கொலை செய்ய ஆள் அனுப்பும் ஐஸ்வர்யா…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் அபிராமியை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதற்கு கூட்டாக ரியாவையும் சேர்த்துக் கொள்கின்றனர். துப்புரவு பணியாளரான ராணி கார்த்தி சாரை பார்த்தா பாவமா இருக்கு, நாம அவங்க போட்டோ எடுத்து குரூப்ல போடுவோம் யாராவது பார்த்தா சொல்வாங்கள்ல என்று போட்டோவை ஷேர் செய்கிறார். கார்த்தி மனசுடைந்து இருக்கிறார். அதோடு நேற்றைய எபிசொட் முடிந்தது,

இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனிக் காணலாம். கார்த்திக்கு திடீரென்று ஒரு யோசனை வருகிறது. உடனே மீனாட்சியிடம் சென்று அண்ணி அம்மா மனசு சரியில்லைன்னா கொஞ்சம் தூரத்துல ஒரு கோவிலுக்கு போவாங்களே அது என்ன கோவில்னு தெரியுமான்னு கேட்கிறான். மீனாட்சியும் ஆமா கார்த்தி ஆனா சட்டுனு அந்த கோவில் நியாபகம் வரமாட்டிங்குது என்று சொல்கிறாள்.

பின்னர் அங்கு வந்த தீபா அத்தை பத்திரமா வீட்டுக்கு வரணும்னு கோவில்ல வேண்டுதல் செய்யப் போறேன்னு கார்த்தியிடம் கூறுகிறாள். மீனாட்சியையும் மைதிலியையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு புறப்படுகிறாள் தீபா.

இன்னொருபுறம் ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் அபிராமியின் கொலை தற்கொலையாக இருக்க வேண்டும் என்று தாங்களே தற்கொலை கடிதம் ஒன்றை தயார் செய்கின்றனர். பின்னர் ஒரு பெரிய ரவுடியைப் பார்த்து அபிராமியின் போட்டோவைக் காண்பித்து இவரை நேரம் பார்த்து கொன்று விட்டு இந்த கடிதத்தை பக்கத்தில் போட்டுவிடுங்கள் என்று சொல்கின்றனர்.

தீபா கோவிலில் மனமுருகி வேண்டி அங்கபிரதட்சணம் செய்கிறாள். துப்புரவு பணியாளர் ராணி அனுப்பிய போட்டோவை அபிராமி தங்கியிருக்கும் கோவிலில் துப்புரவு பணி செய்யும் ஒரு பெண்மணி பார்த்துவிட்டு அபிராமி இருக்கும் இடத்தை ராணிக்கு போன் செய்து கூறுகிறார். ராணி உடனே அந்த தகவலை கார்த்தியிடம் கூறுகிறாள். கார்த்திக் உடனே கிளம்புகிறான்.

அதே போல் கோவிலில் இருக்கும் தீபா, மீனாட்சி, மைதிலி ஆகியோரின் நெருங்கிய உறவினர் ஒருவரும் அபிராமியை பார்த்த தகவலைச் சொல்ல அவர்களும் அங்கிருந்து அபிராமியை கூட்டி வருவதற்கு கிளம்புகின்றனர். அபிராமியை கொலை செய்யவும் ஒரு குரூப் கிளம்பிகிறது. இந்த பரபரப்பான நிலையில் இன்றைய எபிசோட் முடிகிறது. மேலும் காண ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...