பொழுதுபோக்கு

ஹைதராபாத், ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை.. 4 டீம்ல ஆடியும் பெங்களூருவில் மட்டும் கரண் சர்மாவுக்கு கிடைக்காத கவுரவம்..

ஐபிஎல் தொடரில் எந்த வீரரிடம் அதிகம் கோப்பை இருக்கிறது என கேட்டால் பலரும் தோனி, ரோஹித் உள்ளிட்டோரின் பெயர்களை சொல்வார்கள். ஆனால் அதே வேளையில் இவர்கள் தலைமையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் ஆடிய போது அந்த அணியில் இருந்த மற்ற வீரர்கள் எத்தனை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதை கேட்டால் நிச்சயம் நாம் சில நேரம் யோசிக்க தான் செய்வோம்.

ஆனால் அதே வேளையில் ஏறக்குறைய நான்கு முதல் ஐந்து அணிகளுக்காக ஆடிய போது கோப்பையை வென்றிருந்தாலும், ஒரே ஒரு அணிக்காக அது நடக்காமல் இருப்பதை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

இந்தியாவை சேர்ந்த மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் கரண் ஷர்மா. இவர் இந்திய அணிக்காக தொடர்ந்து பல போட்டிகளில் ஆடாமல் இருந்தாலும் ஐபிஎல் தொடர் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தனது சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதும் முதல் போட்டியிலேயே வெளியேறி இருந்தது.

கடந்த மூன்று சீசன்களாக பெங்களூர் அணிக்காக கரண் சர்மா ஆடி வந்தபோதிலும் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாமல் இருப்பது வியப்பாகத்தான் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை தாண்டி கோப்பைகளை வென்றுள்ள அணிகள் பெயரை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அதில் முக்கியமான ஒரு அணிதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத். கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற சமயத்தில் அந்த அணியில் கரண் ஷர்மா இடம் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தபோது அவர்களே ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தனர்.

இதனிடையே, 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கரண் ஷர்மா இடம்பெற்றிருந்த நிலையில் அந்த அணியும் அதே சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தி இருந்தது. இப்படி கற்றோனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வது போல கரண் ஷர்மா செல்லும் அணி எல்லாம் கோப்பையை கைப்பற்றி வந்தது.

அப்படி ஒரு நிலையில் தான் ஆர்சிபி அணியில் அவர் இணைந்ததும் அவர்களும் அதேபோல ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்து விடுவார்கள் என அனைவருமே கருதினர். ஆனால் மற்ற அணிகளுக்கு எல்லாம் அதிர்ஷ்டக்காரனாக கருதப்பட்ட கரண் ஷர்மா, மூன்று ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக ஆடிய போதிலும் ஒரு முறை கூட அவர்கள் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது பலரையும் வியப்பில் தான் ஆழ்த்தி உள்ளது.

Published by
Ajith V

Recent Posts