தளபதி விஜயை புகழ்ந்து தள்ளும் கன்னட சூப்பர் ஸ்டார்! ரசிகர்கள் கொண்டாட்டம்..

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. அதை தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வகையில் தளபதி 68 திரைப்படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தளபதி இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படம் தளபதியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 68 இன் படப்பிடிப்புகள் தாய்லாந்து, சவுதி அரேபியா, ஹைதராபாத் என பல இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தற்பொழுது சென்னையில் இந்த மாதம் முழுக்க படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடக்க இருப்பதாகவும், அதன் பின் ஸ்ரீலங்காவில் சில காட்சிகள் படமாக உள்ளதாகவும் இறுதியாக இஸ்தான்புல்லில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மார்ச் மாதத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் நிறைவடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சிநேகா, பிரேம்ஜி, யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

அதிரடி சண்டை காட்சிகளுடன் உருவாகும் GOAT திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் தளபதி நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த லியோ திரைப்படத்தை விட அதிகப்படியான வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தளபதி விஜய் குறித்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கூறிய சில தகவல்கள் தற்பொழுது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினியை தொடர்ந்து சிவராஜ்குமாரின் நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு ஓர் காரணமாக அமைந்திருந்தது. அதை தொடர்ந்து நடிகர் சிவராஜ்குமார் தற்பொழுது தனுசுடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பிரமோஷன் பணியில் தற்பொழுது சிவராஜ் குமார் இறங்கி உள்ளார்.

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை ஓரம் கட்ட ஜெயலலிதாவை களம் இறக்கிய எம்ஜிஆர்!

அந்த வகையில் விஜயின் படங்கள் அனைத்தும் தனக்கு பிடிக்கும் என்றும் அவரது ஸ்டைல் வித்தியாசமானது என்றும் சிவராஜ் குமார் கூறியுள்ளார்.மேலும் விஜய் கடினமாக உழைத்து தற்போதைய வெற்றியை அடைந்துள்ளதாகவும், ஒரே இரவில் அவர் இதை பெறவில்லை என்றும் வெற்றிக்காக கடினமாக உழைத்ததாகவும் பாராட்டியுள்ளார். தன்னுடைய நடை, உடை,பாவனைகளையும் விஜய் மெருகேற்றி கொண்டுள்ளதாகவும் சிவராஜ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற கடினமாக உழைப்பவர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தளபதி விஜய் படித்து வரும் மாணவர்களுக்காக பல உதவிகளை செய்து வருவது மிகவும் சிறந்த செயல் எனவும், விஜய் அரசியலுக்கு வருவதற்கான தகுதியை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் மக்களும் தளபதி விஜயை நம்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இந்த பேட்டி தற்பொழுது தளபதி ரசிகர்களிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.