கமலின் தக் லைஃப் படத்தில் சிம்பு மற்றும் பகத் பாசில்! வெளியான சீக்ரெட் அப்டேட்!

உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களின் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் இணையும் 234 வது படத்தின் டீசர் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பின் இணையும் இந்த கூட்டணி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கமலின் தக் லைப் டீசர் வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

பொதுவாக நடிகர் கமல்ஹாசன் தனது திரைப்படங்களுக்கு தூய தமிழில் பெயர் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார் .ஆனால் அவர் நடிக்கும் 234 வது திரைப்படத்திற்கு தக் லைஃப் என தலைப்பிடப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் அனைத்து திரைப்படங்களின் பெயர்களும் அதே போல் தமிழை மையமாக வைத்தே அமைந்திருக்கும். மணிரத்தினம் இயக்கிய பகல் நிலவு திரைப்படத்தில் தொடங்கி இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை தமிழ் டைட்டிலை மையமாக வைத்து படம் எடுக்கும் மணிரத்தினம் தற்பொழுது ஆங்கில டைட்டில் வைத்திருப்பது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த படம் தக்கிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என கமல் மற்றும் மணிரத்தினம் சேர்ந்து எடுத்த முடிவின் பேரில் இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் கமல் தனது பெயரை ரங்கராய சக்திவேல் நாயகர் மறந்து விடாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தேவர்மகன் திரைப்படத்தில் சக்திவேல் தேவன் என சாதியை குறிப்பிட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த திரைப்படத்திலும் சாதியின் பெயரை மையமாக வைத்துள்ளதாக அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட துவங்கி உள்ளது.

அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்தாலும் கமலின் 234 வது திரைப்படத்திற்கு தக் லைஃப் என டைட்டில் வைப்பதற்கு முக்கிய காரணம், இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் விதமாக இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நாசர் என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

ரஜினி 171வது படத்தில் ரத்னகுமார்? லோகேஷ் முடிவால் ஆடிப் போன ரசிகர்கள்!

இந்நிலையில் இந்த படத்தில் கமலுக்கு அடுத்தபடியாக இரண்டு பெரும் ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியாக இருந்தது. அதாவது இந்த படத்தில் நடிகர் சிம்பு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நடிகர் சிம்பு கமலஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக அவர் நீளமான தாடி மீசையுடன் இருப்பதால் தனது கெட்டப்பை மாற்ற முடியாத காரணத்தினால் சிம்புவிற்கு பதிலாக துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். அதை போல் வேறு சில காரணங்களினால் பகத் பாசிலுக்கு பதிலாக ஜெயம் ரவி இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கு முன்னதாக மணிரத்தினம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் அருண் விஜய் கதாபாத்திரத்திற்கு பதிலாக பகத் பாசில் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...