20 நாட்களில் படமாக்கப்பட்ட கமலின் சிவப்புரோஜாக்கள் படத்தின் வாய்ப்பை தவற விட்ட ஹீரோ?

பாரதிராஜா என்றாலே மண்வாசம் சார்ந்த கதைகளை தான் இயக்குவார் என்பதை மாற்றிய படம் தான் சிவப்பு ரோஜாக்கள். இப்பொழுது வெளியாகும் பிளேபாய் படங்கள் மற்றும் சைக்கோ கில்லர் படங்களுக்கு முன்னோடியே இந்த படம் தான். அந்த காலத்திலேயே பெண்களுக்கு எதிரான நெகட்டிவ் கதையில் வெளியான இந்த படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

முழுக்க முழுக்க திரில்லராக கொலை நடுங்கும் கிளைமாக்ஸ் காட்சிகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கமல்ஹாசன் தான் நெகட்டிவ் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடைய ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். இன்றுவரை சிகப்பு ரோஜாக்கள் படத்தின் பங்களா மற்றும் அதில் வரும் கருப்பு பூனையை பார்த்தாலே பயமாக இருக்கும். அந்த அளவிற்கு மிரட்டளாக படம் எடுத்திருப்பார் இயக்குனர்.

படம் முழுக்க கமல்ஹாசன் கோட் சூட் அணிந்து பெண்கள் பார்த்ததுமே மயங்கும் அழகுடன் வலம் வந்திருப்பார். இவர் மீது காதலில் விழும் பெண்கள் அத்தனை பேருக்கும் அடுத்து மரணம் என்பது தான் படத்தின் கதை. மேலும் ஹீரோயின் ஸ்ரீதேவியை மட்டும் உண்மையாக விரும்பி திருமணம் செய்வது போல கதை அமைந்திருக்கும்.

சின்ன வயதில் இருந்தே பெண்களால் கமலுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் இவரை அப்படி ஒரு சைகோ கில்லர் ஆக மாற்றிவிடும். இந்த படத்தில் இந்த கேரக்டருக்கு கமல் கணக்கட்சிதமாக பொருந்தி இருந்தாலும் பாரதிராஜாவின் முதல் சாய்ஸ் நடிகர் சிவக்குமார்.

ஆனால் சிவக்குமார் கதையை கேட்டுவிட்டு இதுபோன்ற நெகட்டிவ் ரோல்களில் நான் நடிப்பதற்கு விரும்பவில்லை என்று சொல்லி கதையை மறுத்துவிட்டாராம். ஆனால் கமல் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தில் நடித்து கலக்கியிருப்பார். ஒருவேளை இந்த கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தால் அது கமல் அளவுக்கு மக்களிடைய  பிரபலமடைந்து இருக்குமா என தெரியவில்லை.

மேலும் சிவக்குமார் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதற்கு பயந்ததற்கு முக்கியமான காரணமும் ஒன்று உள்ளது. சிவப்பு ரோஜா படத்திற்கு முந்தைய வருடம் ரிலீஸ் ஆன புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வித்தியாசமாக வில்லன் கேரக்டரை முயற்சி செய்திருந்தார் சிவக்குமார். ஆனால் அது மக்களிடையே எடுபடாமல் போய்விட்டது. அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போனது குறிப்பிடத்தக்கது.

இனி நெகட்டிவ் கேரக்டரில் பண்ண வேண்டாம் என்றுதான் அவர் சிகப்பு ரோஜாக்கள் படத்தை ரிஜெக்ட் செய்திருந்தார். ஆனால் 20 நாட்களில் சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த படத்தின் இயக்குனர். மேலும் படத்திற்காக பங்களா கிடைக்காமல் அலைந்தோம், திநகரில் ஒரு பங்களாவை பார்த்தோம் பிடித்திருந்தது. அதன் பின் படத்தில் வரும் கருப்பு பூனைக்காக நாங்கள் பட்ட பாடு மறக்கவே முடியாது என இயக்குனர் பாரதிராஜா சிகப்பு ரோஜா படம் ரிலீஸின் போது ஒரு பேட்டியில் அனுபவங்களை கூறியிருந்தார்.

ஹீரோக்கள் வாய் பேச முடியாமல் நடித்த படங்களின் லிஸ்ட் இதோ!

பாரதிராஜாவுக்கு சிட்டி கதைகள் வராது என பத்திரிகைகளில் அப்பொழுது எழுதினார்கள். முதல் இரண்டு படங்களான 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் இரண்டு படங்களும் கிராமத்து கதை. இதிலும் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் படம் சென்னை தேவி தியேட்டரில் ஒரு வருடத்தை கடந்து ஓடியது.

இருப்பினும் நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் இந்த கேள்வியை எழுப்பி இருந்தார்கள் அந்த கோபத்தோடு எடுத்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள். நெகட்டிவான கதை என்பதால் இரண்டு ஹீரோக்கள் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. கமல் தான் உடனே சம்மதித்தார். புதுமைகளை செய்வதில் அப்போதே கமல் அப்படித்தான் என்று பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...