படப்பிடிப்பு தளத்தில் பிடிவாதம் பிடித்த கமல்! கோபத்தை வெளிக்காட்டிய சிவாஜி!

உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பின்பு திரை உலகில் மீண்டும் கம் பேக் கொடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கமல் தன் திரை வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்த விரிவான தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் கமல் கதை, திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் தான் தேவர் மகன். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கமலின் அப்பாவாக ஒரு சிறப்பு வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் கவுதமி, ரேவதி. வடிவேலு, நாசர், தலைவாசல் விஜய் என பலர் நடித்திருப்பார்கள். கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பரம்பரை பகை காரணமாக சிவாஜி உடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த நினைக்கும் நாசரிடமிருந்து தன் குடும்பத்தையும் அந்த ஊரையும் கமல் எப்படி காப்பாற்றுவார் என்பது தான் இந்த படத்தின் கதை. அதாவது இந்த படத்தில் சொல்லவரும் முக்கிய கருத்து என்னவென்றால் சாதிப் பெருமையை பேசினால் கலவரம் தான் நடக்கும், அப்பாவி ஊர்கள் அழியும், அதற்கு பதிலாக அன்பும், மனித நேயமும் கொண்டு இருந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்ற கருத்தை மையமாக படம் முழுக்க கமல் வைத்திருப்பார்.

ஆனால் நாசர் பண்ணக்கூடிய அடாவடித்தனத்தை பொறுத்துக் கொள்ளாமல் இறுதியில் அவரை கொல்வது தான் படத்தின் கடைசி காட்சியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் கமல் தான் செய்த தவறை அவரே எண்ணி வருந்தி புள்ள குட்டிகள படிக்க வையுங்க என்னும் வசனத்தோடு இந்த படம் முடிந்திருக்கும்.

இந்த படத்தின் ஒரு சிறப்பான விஷயம் படத்தில் சிவாஜிக்கு பெரும் மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது ஊர் தலைவராகவும் அவர் கூறுவதை அந்த ஊர் மக்கள் கேட்டு நடந்து வருவது போன்று சிறப்பான கதையை கமல் உருவாக்கி இருப்பார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க இந்த படத்தில் நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சமீபத்தில் கமல் பகிர்ந்து இருப்பார்.

அதாவது இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அமர்ந்திருக்கும் ஒரு நாற்காலி இடம் பெற்று இருக்கும். இந்த படப்பிடிப்பிற்காக பல நாற்காலிகள் வந்தது. ஆனால் அதில் எந்த நாற்காலியும் கமல்ஹாசன் அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு நாற்காலி இல்லாமல் படப்பிடிப்பும் பல நாட்கள் தள்ளிப்போனது. இந்த நிலையில் ஒருநாள் அந்த நாற்காலி வரவில்லை என்பதற்காக சிவாஜி அவர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தாராம் அது அவருக்கு கோவத்தை ஏற்படுத்தியது.

பாடகர் எஸ்.பி.பிக்கு இப்படி ஒரு ஆசையா.. நிறைவேறாமல் போனது எப்படி?

அதன்பின் கமல் விருப்பப்படி ஒரு நாற்காலி வர அதில் சிவாஜி அவர்களை உட்கார வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம். அதன் பின் இந்த படத்தின் டப்பிங் வேலையின் போது படத்தில் சிவாஜி இறந்தபின் சிவாஜி இடத்தில் அந்த நாற்காலியில் அமர்ந்து கமல் அந்த ஊரை பாதுகாத்து வருவது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதை பார்த்த சிவாஜி ஏண்டா அந்த நாற்காலி நான் உட்காருவதற்கு செலக்சன் பண்ணல, நீ உட்காருவதற்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டு செலக்சன் பண்ணிருக்க ராஸ்கல் என கிண்டலாக கேட்டுள்ளார்.

இதை கமல் கூறும் போது சிவாஜி அவர்கள் உட்கார்ந்த நாற்காலியில் நான் உட்காருவதை கூட அவர் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார் என்பதை மிக மகிழ்ச்சியோடு தெரிவித்து இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...