இது டூப் உப்புமா.. களத்தூர் கண்ணம்மா ஷூட்டிங்கில் கடுப்பில் கத்திய கமல்.. பரபரப்பான இடம்..

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து சுமார் 62 ஆண்டுகள் கடந்து விட்டது. எப்போதுமே அனைவருக்கும் மிக முன்மாதிரியாக இருக்கும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் பல டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைத்ததில் கில்லாடி. அவர் அறிமுகம் செய்யும் காலத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக இல்லாத சூழலில் பல ஆண்டுகள் கழித்து தான் கமல் உருவாக்கிய புதுமையின் அருமையும் பலருக்கு தெரியவரும்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவின் முன்னோடியாகவே திகழும் கமல்ஹாசன் எப்போதும் ஏதாவது புதிதாக ஒரு விஷயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் யோசனையாகவும் இருப்பார். ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு டெக்னாலஜியை விரும்பும் கமல்ஹாசன், தற்போது ஹெச். வினோத் இயக்கத்திலும், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் Thug Life என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, தனது முதல் திரைப்படமான களத்தூர் கண்ணம்மாவில் கமல் நடித்த போது நடந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்த கமல், ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில், ‘அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என மழலை கமல் தோன்றும் பாடல் இன்று வரையிலும் எவர்கிரீன் ஹிட்டாகும்.

அப்படி இருக்கையில், களத்தூர் கண்ணம்மா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் மழலை கமல்ஹாசன் மிக சுட்டித்தனமாக விஷயம் ஒன்றை செய்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு நடந்த இடத்தில் மாங்காய் மரம் ஒன்றை பார்த்து அதிலிருந்த மாம்பழத்தை பறித்து தருமாறு ஜெமினி கணேசனிடம் கமல் கேட்டுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு கடித்து பார்த்தபோது தான் அது போலியானது என தெரிய வந்துள்ளது. “டூப் மாங்காய்” என்றும் அங்கே கத்தி அந்த மாங்காயை வீசி உள்ளார் கமல்ஹாசன்.

இதேபோல மற்றொரு நாள் படப்பிடிப்பிலும் அந்த வீடு செட் போடப்பட்டிருக்க, முதலில் நிஜ வீடு என நினைத்த கமல், பின்னர் ‘டூப் வீடு’ என்றும் உண்மை தெரிந்து கத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிகை சாவித்திரி கமலுக்கு உப்புமாவை ஊட்டி விடும் காட்சி ஒன்றும் இடம்பெற்றிருக்கும். ஏற்கனவே படப்பிடிப்பில் பல இடத்தில் டூப் மாங்காய், டூப் வீடு என பார்த்து தெரிந்து கொண்ட கமல், உப்புமாவையும் டூப் என நினைத்துள்ளார்.

சாவித்திரி கமலுக்கு உப்புமா ஊட்டிவிட்ட காட்சி முடிந்ததும் தான் வாயில் இருந்த உப்புமாவை துப்பி விட்டு ‘டூப் உப்புமா’ என்றும் கத்தியுள்ளார் கமல்ஹாசன். இதனைப் பார்த்ததும் ஸ்பாட்டில் இருந்த அனைவருமே சிரிக்க ஆரம்பிக்க, அங்கே அசிஸ்டன்ட் இயக்குனராக இருந்தவர், அந்த உப்புமாவை உண்டு, அது டூப் இல்லை என்பதையும் கமலுக்கு உணர்த்தி பின்னர் அவரை சமாதானப்பட வைத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.