மாஸ்டர் பீஸ் படத்தை ரீ ரிலீசுக்கு கையில் எடுத்த உலகநாயகன்.. அதை திரையில் காண்பது ஒரு வரம்!..

வேட்டையாடு விளையாடு படத்தை இந்த ஆண்டு 4கே தொழில்நுட்பத்தில் மாஸ்டரிங் செய்து வெளியிட்டு வசூல் செய்த உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான எவர்க்ரீன் மாஸ்டர் பீஸ் திரைப்படத்தை புத்தம் புது தொழில்நுட்பத்தில் 4கே முறையில் திரையில் வெளியிட திட்டமிட்டுள்ள அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

விஸ்வரூபம் படத்தை இயக்கி நடித்த கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் தோல்வியை தழுவிய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புதிய படங்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை ஆரம்பித்தார்.

விக்ரம் தந்த புத்துணர்ச்சி: 

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தின் சூட்டிங்கின்போது நடந்த கோர விபத்து காரணமாக மூன்று பேர் பலியான நிலையில், ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்கள் நடந்தன. அதன் காரணமாக அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த கமல்ஹாசனை லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் நடிக்க வைத்து சுமார் 400 கோடி ரூபாய் வசூல் வேட்டையை நடத்தி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுத்திருந்தார்.

அடுத்தடுத்து பெரிய படங்கள்:

விக்ரம் படம் கொடுத்த புத்துணர்ச்சி காரணமாக கமல் மீண்டும் இந்தியன் 2 படத்தை ஆரம்பித்தார். அந்த படம் விரைவில், முடிவடைய உள்ள நிலையில், பிரபாஸின் கல்கி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவும் கமிட் ஆகியுள்ளார். மேலும் அடுத்ததாக, ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த ஆண்டு கமல் நடிப்பில் எந்த படமும் வெளிவராத நிலையில் ரசிகர்களுக்காக தனது பழைய படங்களை ரிமாஸ்டரிங் செய்து புதிய தொழில்நுட்பத்தில் தியேட்டர்களில் வெளியிட்டு வருகிறார்.

பேசும் படம் ரீ – ரிலீஸ்:

கமலின் ஆஸ்த்தான இயக்குநரான சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தமிழில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களை அற்புதமாக இயக்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

kamal pesum padam

 

1987 ஆம் ஆண்டு சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல், அமலா அக்கினேனி, பிரதாப் போத்தன், டினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்த பேசும் படம் மெளனப் படமாக வெளியானது. தமிழில் பேசும் படமாகவும் தெலுங்கில் புஷ்பக விமானம் எனும் பெயரில் வெளியான அந்த படத்தைத் தான் தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் ரீ மாஸ்டரிங் செய்து புதிய தொழில்நுட்பத்தில் இந்த காலத்து 2கே கிட்ஸ்கள் பார்த்து வியக்கும் வண்ணம் விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...