பொன்னியின் செல்வனில் மிஸ்ஸான கீர்த்தி சுரேஷ்!.. சைரனில் மடக்கிப் பிடித்த ஜெயம் ரவி!..

இறைவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த நிலையில், தற்போது சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார். அதன் டீசர் இன்று மாலை ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி கலந்து கொண்டு வெளியிடுகிறார்.

அதற்கான பிக் பாஸ் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்ட ர்பக்கத்தில் ஜெயம் ரவியின் சைரன் டீசரை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் சைரன் டீசர்

இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். கோமாளி படத்தில் கிளைமேக்ஸில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஜெயம் ரவி ஏமாற்ற வேஷம் போட்டிருப்பார். ஆனால், இந்த படத்தில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக கைதியாக ஜெயிலில் சிறைபடும் ஜெயம் ரவி ஆயுள் தண்டனையை அனுபவித்து 14 ஆண்டுகள் கழித்து வெளியே வந்து தன்னுடைய எதிரிகளை வேட்டையாடுவது தான் சைரன் படத்தின் கதையாக உள்ளது.

உயிரை காப்பாற்றும் ஆம்புலன்ஸ் டிரைவராக செயல்பட்டு வரும் ஜெயம் ரவி தான் பெரிய சம்பவங்களை செய்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

சமுத்திரகனி, யோகி பாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சைரன் டீசர் பார்க்கவே மிரட்டலாக உள்ளது.

போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ்

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக முதலில் கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், மணிரத்னம் படத்தையே வேண்டாம் என கீர்த்தி சுரேஷ் விட்டு விட்டார். அதன் விளைவாக அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து தனக்கான இடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டமாக சைரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த நிலையில், எந்தவொரு பெரிய போட்டியும் இல்லாமல் ஜெயம் ரவி சைரன் படத்தை வெளியிட்டு இறைவன் படத்தில் அடைந்த தோல்வியை சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்‌ஷனில் அதகளப்படுத்தும் ஜெயம் ரவி வயதான லுக்கிலும் மாஸ் காட்டுகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சைரன் படத்தின் டீசரை ரிலீஸ் செய்து தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மேலும், ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி, பிரதர், தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.