சைரன் விமர்சனம்!.. கைதி படத்தை மிஞ்சியதா ஜெயம் ரவியின் சைரன் படம்?..

சாதாரண ஆம்புலன்ஸ் டிரைவராக காஞ்சிபுரத்தில் தனது குடும்பத்துடன் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஜெயம் ரவி திடீரென செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் அனாதையாக வளரும் தனது மகளை எப்படியாவது சந்தித்து அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே ஜெயம் ரவி மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சைரன் விமர்சனம்:

சிறையில் சிறந்த மனிதனாகவும் அமைதியைப் பேணும் நபராகவும் ஜெயம் ரவி நடந்து கொள்வதைப் பார்த்து அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. அந்தப் பரோலும் தனக்கு தேவை இல்லை என கூறும் அளவுக்கு அப்பாவியாக இருக்கும் ஜெயம் ரவி வெளியே வந்த சில நாட்களில் எப்படி அடுக்கடுக்கான கொலைகளை செய்து போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டி தப்பிக்கிறார் என்பதுதான் இந்த சைரன் 108 படத்தின் கதை.

திலகன் என்னும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பொறுப்பாகவும் மகளைப் பிரிந்து தவிக்கும் அப்பாவாக பாசத்தையும், மனைவியின் மரணத்திற்கு பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொலைகாரன் ஆகவும் ஏகப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அந்த கொலைகளை எல்லாம் ஜெயம் ரவி தான் செய்கிறார் என்பதை கண்டுபிடித்தாலும் அதற்கான சாட்சியங்கள் இல்லாமல் இவரைக் திணறும் காட்சிகளில் நடிகையாக மிளிர்கிறார்.

ஜெயம் ரவியின் மனைவியாக ஒரு சில காட்சிகள் பிளாஷ் பேக்கில் வந்து போகிறார் அனுபமா பரமேஸ்வரன். போலீஸ் உயர் அதிகாரியான சமுத்திரக்கனியை இந்த படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார். புதுப்பேட்டை படத்தில் மிரட்டிய அரசியல் தலைவரைப் போலவே அழகம்பெருமாள் எந்த படத்திலும் நெகட்டிவ் ரோலில் நச்சென பொருந்துகிறார்.

யோகி பாபுவின் காமெடி முதல் பாதையை கடக்க உதவுகிறது. ஆனாலும் பல இடங்களில் படத்தில் ஏற்படும் தொய்வு மற்றும் திணிக்கப்பட்ட காட்சிகள், இரண்டாம் பாதியில் சொல்லப்படும் சமூகத்துக்கு தேவையான கருத்துக்கள், சாதிய பிரச்சனைகள் போன்றவை படத்தின் கதையை திசை திருப்புவதாக உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் படங்கள் பெரும் சொதப்பல சொதப்பிய நிலையில், சைரன் திரைப்படம் அதிலிருந்து சற்றே ஜெயம் ரவியை காப்பாற்றுகிறது. அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இன்னமும் சற்றே மெனக்கெட்டிருந்தால் இந்த படமும் கைதி படத்தை போல பிளாக்பஸ்டர் படமாக வந்திருக்கும்.

சைரன் – சான்ஸ் இருக்கு!

ரேட்டிங் – 3/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.