பிரபல கிரிக்கெட் வீரர் மீது ஜெயலலிதாவிற்கு இருந்த க்ரஷ்.. அவருக்காகவே நடிகை செஞ்ச அதிரடி விஷயம்..

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் ஏராளமான நடிகைகள் வந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்கலாம். ஆனால் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி அரசியலில் நுழைந்து புரட்சித் தலைவி என பெயர் எடுத்த ஜெயலலிதாவை போல சினிமாவில் ஒரு நடிகை இனி அந்த இடத்தை நிரப்புவதே மிகக் கடினமான ஒன்று தான்.

வெறுமென அதிர்ஷ்டத்தில் சினிமாவுக்குள் நுழையாமல் மிகவும் பாடுபட்டு பல்வேறு அவமானங்களையும், கஷ்டங்களையும் சந்தித்து சினிமாவில் அறிமுகமான ஜெயலலிதா, தான் நடிக்க ஆரம்பித்த முதல் வருடத்திலேயே எம்ஜிஆருடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருந்தார். அழகாக இருந்ததுடன் மட்டுமில்லாமல் தன்னுடைய நடிப்பின் மூலம் கூட ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்த ஜெயலலிதா, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், நாகேஷ், ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்த காலத்தில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிய ஜெயலலிதா, அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் வழியில் அரசியலில் நுழையவும் செய்திருந்தார். எம்ஜிஆருடன் இணைந்து இவர் அரசியலில் ஈடுபட்டு வந்த சூழலில் தான் எம்ஜிஆரும் கடந்த 1987 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவிற்குப் பின் அதிமுக கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்த சூழலில், அவமானங்களை அதிகம் சந்திக்கவும் ஜெயலலிதாவுக்கு தலைவிதி இருந்தது.

இவை அனைத்தையும் கடந்து அதிமுக கட்சிக்கு தலைமை தாங்கி வந்த ஜெயலலிதா, பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் பணியாற்றினார். சினிமாவில் எந்த அளவுக்கு சாதித்தாரோ அதைவிட ஒரு படி மேலே சென்று மக்கள் அனைவருக்கும் நல்லாட்சி வழங்கியதுடன் பலரின் விருப்பப்பட்ட முதலமைச்சர் என்ற பெயரையும் அவர் அரசியலில் சம்பாதித்திருந்தார்.

காலத்தால் ஜெயலலிதா மறைந்து போனாலும் அவரது சினிமா படைப்புகளும் அவர் மக்களுக்காக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களும் என்றென்றைக்கும் மக்கள் மத்தியில் மறக்க முடியாத விஷயங்கள் தான். சினிமாவில் நடித்த சமயத்தில் பேரும், புகழும் பெற்றிருந்த ஜெயலலிதா, ஒரு கிரிக்கெட் வீரர் மீது அதிக க்ரஷ்ஷாக இருந்த விஷயம் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்தவர் தான் நாரி காண்ட்ராக்டர். இவர் கடந்த 1960களில் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்து வந்த நிலையில் தான் இவரை ஜெயலலிதாவும் அதிகம் ரசித்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நாரி காண்ட்ராக்டரை பார்ப்பதற்காகவே இந்திய அணி மோதும் டெஸ்ட் போட்டிகளை பார்க்க நேரடியாக மைதானத்திற்கு செல்லும் பழக்கத்தையும் ஜெயலலிதா கொண்டிருந்துள்ளார்.

அந்த அளவுக்கு நாரி காண்ட்ராக்டரை அதிகம் தான் நேசித்ததாகவும், பேட்டி ஒன்றிலும் கூட தெரிவித்திருந்த நடிகை ஜெயலலிதவுக்கு ஷம்மி கபூர் என்ற பாலிவுட் நடிகரும் அந்த காலத்தில் பிடித்தமான நடிகராக இருந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...