தான் நடிச்ச படத்தையே தியேட்டர்ல பாக்க முடியல.. ஜெயலலிதாவுக்கு நேர்ந்த பரிதாபம்.. அந்த ஒரே காட்சி தான் காரணம்..

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நம்பர் 1 நடிகையாக இருந்ததுடன் மட்டுமில்லாமல் அரசியலிலும் நுழைந்து முதலமைச்சராகி மறைந்த ஆளுமை தான் ஜெயலலிதா. தான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் ஏராளமான துன்பங்களையும், கஷ்டங்களையும் கடந்து என்ட்ரி கொடுத்திருந்த ஜெயலலிதா, மெல்ல மெல்ல தனது நடிப்பால் நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

எம்ஜிஆருடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்துள்ள ஜெயலலிதா, சிவாஜி கணேசன் தொடங்கி ஜெய்ஷங்கர் என ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக, எம்ஜிஆருடன் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் நிஜத்திலும் அவர்கள் அப்படி ஒரு ஜோடியாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வந்ததால் தவிர்க்க முடியாத நடிகர் – நடிகை காம்போவாகவும் இவர்கள் இருந்தனர்.

திரைப்படத்தில் தனக்கு கிடைத்த பெயருடன் அரசியலிலும் என்ட்ரி கொடுத்தார் ஜெயலலிதா. எம்ஜிஆரை போல சினிமாவில் இருந்த செல்வாக்குடன் அரசியலுக்கு வந்த ஜெயலலிதா சந்தித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சிறந்த முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் மறைந்த பின், அவரை போல ஒரு இனிமேல் தமிழகத்தில் ஒருவரால் நல்லாட்சியை கொடுக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது.

ஆனால், அதிமுக கட்சிக்கு பின்னாளில் தலைமை வகித்ததுடன் முதலமைச்சராக உருவெடுத்து எம்ஜிஆரை விட ஜெயலலிதா ஒரு படி மேலே சென்றார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அரசியலில் சிறந்த ஆளுமையாக இருந்ததுடன் இரும்பு பெண்மணி என்றும் அழைக்கப்பட்டார். திடீரென இவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அடுத்த சில மாதத்தில் அவர் மறைந்து போனது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருந்தது.

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த ஜெயலலிதாவின் இடத்தை வருங்காலத்தில் ஒருவர் நிரப்புவதே கடினம் என்று தான் பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜெயலலிதா நடித்த படத்தையே அவரால் திரையரங்கில் பார்க்க அனுமதி கிடைக்காமல் போனது பற்றி தற்போது பார்க்கலாம்.

தமிழில் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமாகி இருந்தார் ஜெயலலிதா. அப்போது அவருக்கு 16 வயது தான் ஆகி இருந்தது. இந்த படத்தில் அருவி ஒன்றின் அருகே ஸ்லீவ்லெஸ் அணிந்தபடி ஜெயலலிதா நடித்திருப்பார். மேலும் இந்த காட்சி படத்தில் இடம்பெற்றிருந்ததன் காரணமாக, ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இதன் பெயரால், 16 வயதே நிரம்பி இருந்த ஜெயலலிதாவால் தான் நடித்த படத்தையே திரையரங்கம் சென்று பார்க்க முடியாமலும் போனதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...