தயாரிப்பாளர்களை இந்திக்கு அழைத்துச் சென்ற பிரம்மாண்ட படம்… அப்பவே விளம்பரத்துக்கு அவ்ளோ செலவா?

தமிழ்ப்படங்கள் பல வகைகளில் பல்வேறு சரித்திர சாதனைகள் படைத்துள்ளன. உலக சினிமாவுக்கே சவால் விடும் வகையில் இன்றைக்கு பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமா கையாண்டு வருகிறது. சமீபத்தில் வந்த கல்கி 2898 AD படத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

என்றாலும் தமிழ்சினிமாவின் முதல் பிரம்மாண்ட படம் என்றால் அது எஸ்.எஸ்.வாசனின் சந்திரலேகா தான். படத்தின் இமாலய வெற்றி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. படத்தில் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப கதையும், காட்சி அமைப்புகளும் இருந்தன. இது தான் படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்தன.

தமிழ்சினிமாவில் முதல் பிரம்மாண்டமான படைப்பு என்றால் அது சந்திரலேகா தான். இது ஒரு மாபெரும் வெற்றிப்படம். இந்தப் படம் இந்தியிலே வெளியான போது இந்து பத்திரிகையில் ஒரு வண்ண விளம்பரத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டார் எஸ்எஸ்.வாசன்.

Chandraleka
Chandraleka

அந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அந்தக் காலத்திலேயே தயாரிப்பாளர் எஸ்எஸ்.வாசன் 25 லட்ச ரூபாயை செலவழித்தாராம். அதன் இன்றைய மதிப்பு 176 கோடி ரூபாய்.

இந்தப் படத்தில் இந்தி நடிகர்கள் நடிக்கவில்லை. என்றாலும் அந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அந்தப் படத்தின் விளம்பரம் தான்.

இந்தப் படத்தில் விளம்பரம் மட்டுமல்லாமல் படத்திலும் விஷயம் இருந்ததால் தான் அந்தளவுக்கு அந்தப் படம் மாபெரும் வெற்றியைத் தந்தது. இந்தப் படம் தந்த வெற்றியில் தான் இந்திப்பக்கமும் செல்லலாம் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது என்று பிரபல தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரே தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் தெரிவித்துள்ளாராம்.

ஏவிஎம் மட்டுமல்லாது விஜயா வாஹினி, மாடர்ன் தியேட்டர்ஸ், பட்சி ராஜா போன்ற நிறுவனங்கள் இந்திப் பக்கம் சென்றன என்றால் அதற்குக் காரணம் சந்திரலேகாதான் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

1948ல் வெளியான படம் சந்திரலேகா. ரஞ்சன், எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியவர் எஸ்எஸ்.வாசன். எஸ்.ராஜேஸ்வர ராவ் இசை அமைத்துள்ளார். கதையை கே.ஜே., மகாதேவன், கிட்டு, நைனா, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் எழுதியுள்ளனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...