யூ டியூப்ல 3 கோடி Views இருந்தும் ஒரு வாய்ப்புக் கூட வரல.. புலம்பிய நடிகை நீலிமா ராணி

சினிமாவில் சில நடிகர் நடிகைகள் பல ஆண்டுகாலம் நடித்து வந்தாலும் அவர்களின் பெயர் சொல்லும்படி எந்த ஒரு குறிப்பிட்ட படங்களோ, காட்சிகளோ அமைந்திருக்காது. வருவார்கள் நடிப்பார்கள் செல்வார்கள். இப்படித்தான் அவர்களது திரைப்பயணம் அமைந்திருக்கும். ஆனால் சில கலைஞர்கள் ஒரு காட்சி வந்தாலும் எக்காலத்திலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக மனதில் நின்று விடும். அந்த வகையில் சினிமாவில் ஜொலிக்காவிட்டாலும் சீரியலில் தனது தனி முத்திரையைப் பதித்து வெற்றி நடை போடுபவர்தான் நடிகை நீலிமா ராணி.

1992-ல் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப்பயணத்தினைத் தொடர்ந்தவர் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நடித்து வருகிறார். நீலிமா ராணி சினிமாவில் நடித்துப் பெயர் வாங்கியதைவிட சீரியல்களில் நடித்தே அதிகம் பெயர் பெற்றிருக்கிறார்.

குறிப்பாக மெட்டி ஒலி, வாணி ராணி, கோலங்கள், தென்றல், புதுமைப் பெண் போன்ற மெகா சீரியல்கள் இவருக்கு நல்ல புகழைத் தேடிக் கொடுத்தது. இப்படி 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தோழியாக வந்து நடிப்பில் அசத்துவார். இப்படி ஒரு தோழி நமக்கும் கிடைக்கமாட்டாரா என ரசிகர்களை ஏங்க வைத்திருப்பார்.

15-வது திருமண நாளைக் கொண்டாடிய எம்.எஸ்.தோனி – சாக்ஷி தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதனையடுத்து முழுக்க முழுக்க காமெடியில் இவர் கலக்கிய படம் தான் மன்னர் வகையறா. விமல் ஹீரோவாக நடித்த இப்படத்தில் நடிகை சரண்யாவுடன் காமெடியில் இப்படத்தில் கலக்கியிருப்பார் நீலிமா ராணி. இப்படத்தின் அப்பத்தா காமெடி யூடியூப் தளத்தில் 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது.

அடுத்த தேவதர்ஷினியாகக் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
இந்தப் படத்திற்குப் பின்னர் நீலிமா ராணிக்கு மேலும் அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என எண்ணினாராம். ஆனால் அடுத்து ஒரு பட வாய்ப்புக் கூட கிடைக்கவில்லையாம். இப்படி பல புகழ்பெற்ற படங்களில் நடித்த போதும் தமக்கு என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் வரும் என்று பேட்டி ஒன்றில் புலம்பித் தள்ளியிருக்கிறார் நீலிமா ராணி.

கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் ஒரு சில பெரிய பட வாய்ப்புகளையும் நிராகரித்திருக்கிறார் நீலிமா ராணி தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திய சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, மன்னர் வகையறா என இதுபோன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews