உலகில் பிரளயம் ஏற்பட போகிறதா

உலகில் பிரளயம் ஏற்பட போகிறது என நீண்ட நாட்களாகவே பலரால் சொல்லப்பட்டு வருகிறது. பிரளயம் என்பது ஏற்படுமா இல்லையா என்பதை நாம் சொல்ல முடியாவிட்டாலும் உலகில் பெருகி விட்ட அநியாயங்களாலும் அக்கிரமங்களாலும் ஆன்மிகவாதிகள் சொல்லும் பிரளயம் சம்பந்தமான விசயங்களை நாம் நம்பதான் வேண்டியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் சாமியார் அடுத்த வருடம் பிரளயம் ஏற்படும் என கூறியுள்ளார்.

இப்படி பலரும் பிரளயம் பற்றி கூறி வருகின்றனர்.  மனிதர்கள் வாய்மை தற்போது தவறி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்.  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், வனவிலங்குகள் வாழ்விடங்களை ஆக்ரமித்தது, கடவுள்களை பலிப்போர் அதிகமாகிவிட்டது, கடவுள் பலிப்புக்கு ஆதரவு தரும் படித்த நாகரீக இளைஞர்கள் பெருகிவிட்டது, இன்னும் நீர்நிலைகள், ஏரிகளை ஆக்ரமித்து இடம் கட்டியது, தெருநாய்களை துன்புறுத்துவது, பறவைகள், விலங்குகளை துன்புறுத்துவது, அநியாய வட்டிக்கு கடன் கொடுப்பது என அநியாயங்களை அன்லிமிட்டெட் ஆக தற்போது பட்டியல் போடலாம்.

இயற்கையும் கடவுளும் அனைத்தையும் கவனித்துக்கொண்டுள்ளார்கள். யாராக இருந்தாலும் ஓரளவுதான் பொறுப்பார்கள். பக்திக்கு எதிராகவும் இயற்கைக்கு எதிராகவும் செயல்படும் மனிதர்கள் அதிகமாகி விட்டார்கள். இயற்கை தன் வேலையை மழை ரூபத்தில் காட்டிக்கொண்டு வருகிறது. பஞ்சபூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் இவைகளால் எந்த கணத்திலும் ஆபத்து ஏற்படலாம்.

தொடர் அநியாங்கள் அக்கிரமங்களால் பிரளயம் இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது ஏற்பட வாய்ப்புண்டு.

அதனால் அநியாயம் அக்கிரமங்கள்,இயற்கை, கடவுள் , மற்றும் அப்பாவி மக்களுக்கான எதிர் நிலையிலேயே வாழ்ந்து வந்தால் பிரளயம் என்பது உறுதி.

பூமியில் கடவுள் சக்தியை அதிகரிக்க அனைவரும் கடவுள் வழிபாடு செய்வதும், இயற்கையான விசயங்களை பாதுகாப்பதும் தான் நல்ல பாஸிட்டிவ் அதிர்வலைகளை ஏற்படுத்தி  பெரும் அழிவுகளில் இருந்து காக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews