என்னது நீயா நானா கோபிநாத் விஜய் டிவியில் இருந்து விலகுகிறாரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

விஜய் டிவி என்றாலே பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. வித விதமான நிகழ்ச்சிகளை கொடுத்து பார்வையாளர்களை எங்கேஜ்டாக வைப்பதில் விஜய் டிவி தனித்துவம் வாய்ந்தது தான். அதில் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது விஜய் டிவி. அந்த ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மிக பிரபலமானவர்கள். அவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கும்.

நீயா நானா கோபிநாத், டிடி, பாவனா, மா. கா. பா. ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே, ரக்க்ஷன், ஈரோடு மகேஷ், ஜெகன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் விஜய் டிவியின் மக்களின் வரவேற்பைப் பெற்ற தொகுப்பாளர்கள் ஆவர். அது மட்டுமல்லாது தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர் தான்.

இவர்கள் பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றனர். அதில் அதிக புகழ் பெற்ற தொகுப்பாளினி டிடி முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டு அதிக நேரம் நின்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத காரணத்தினால் விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார்.

அதற்கு அடுத்ததாக தொகுப்பாளினி பாவனா விஜய் டிவியில் இருந்து விலகி விட்டு முழு நேரமாக ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் ஏன் விஜய் டிவியில் இருந்து விலகினார் என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக எனக்கு விஜய் டிவி தெரியவில்லை அதனால் விலகிவிட்டேன் என்று கூறியிருந்தார்.

தற்போது விஜய் டிவியின் பழம்பெரும் நிகழ்ச்சியான நீயா நானாவை தொகுத்து வழங்கும் பழம்பெரும் தொகுப்பாளர் கோபிநாத் விஜய் டீவியை விட்டு விலகுகிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்க இருக்கிறாராம். இதனால் அவர் விஜய் டிவியில் இருந்து விலக போவதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர். ஆனால் கோபிநாத் தரப்பில் இருந்து இது உண்மையான செய்தி இல்லை, அவர் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தெரிந்தவுடன் கோபிநாத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...