இருக்கன்குடி மாரியம்மன் கோவில்

இந்த கோவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ளது. 300 ஆண்டுகளுக்கு இவ்வூரில் முன்பு சாணம் பெருக்கி கொண்டிருந்த பெண் ஒருத்தி திடீர் என சாமி வந்து ஆடி இருக்கிறாள்.

சாமியாடிய பெண் அந்த இடத்தில் உள்ள கூடை இருக்கும் இடத்தில் சிலையாக புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோயில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.

இந்த கோவில் தென்மாவட்டங்களில் மிக புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலாகும். அம்பாள் வேண்டிய யாவற்றையும் பக்தர்களுக்கு நிறைவேற்றி தருகிறாள் என்பது ஐதீகம்.

வைப்பாறு அர்ஜூனா ஆறுகளுக்கு இடையில் ஆற்றுக்குள் நடுவே உள்ள மணல் திட்டில் இந்த கோவில் அமைந்துள்ளது.

வழக்கமான கோவில்களில் உள்ளது போல் இக்கோவில்களில் மாரியம்மன் இல்லை. வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டிருப்பது போல் அமைந்திருக்கும். இந்த உலகத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது” என்பதுதான் இதன் அர்த்தமாம்.

தீராத பிரச்சினைகள் பலவற்றை இந்த அம்பிகை தீர்த்து வைக்கிறாள் ஒரு முறை இந்த ஆலயம் சென்று அம்மனின் அருள் பெற்று வாருங்கள்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print