இறைவனின் அருள்மழை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-16


dccc6a1d10320e48f6f661a34a26dd15-1

பாடல்..

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்..

பொருள்:

மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து, எம்மை உடையாளாகிய அம்மை உமாதேவியனது திருமேனி போல் நீல நிறத்தோடு விளங்கி, எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல் மின்னி விளங்கி, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல் சிலம்பி, அவளது திருப்புருவம் போல் வானில் வானவில் விட்டு, நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான், அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும் தனது திருவுளம் கொண்டு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையை பொழிவாயாக..

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.