சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை.. 3 டீம் இல்லாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக நடக்க போகும் சம்பவம்..

இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் அடிப்படையில், அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகள் என்றால் நிச்சயம் யோசிக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளை கைகாட்டி விடலாம். இந்த 2 அணிகளில் ஏதேனும் 2 அணிகள் மாறி மாறி மோதினாலோ அல்லது இவர்கள் லீக் சுற்றை தாண்டி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டாலோ ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் தான்.

இவர்களை தாண்டி கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு திகழ்ந்து வந்தாலும், ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் மும்பை உள்ளிட்ட அணிகள் தான் எப்போதுமே டாப் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், இதில் சிஎஸ்கேவை தவிர மற்ற இரண்டு அணிகளும் இறுதி போட்டிக்கு நுழைந்தே பல ஆண்டுகள் ஆகி விட்டது.

இதில், ஆர்சிபி அணி கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டு வந்தாலும் ஏனோ இறுதி போட்டிக்கு முன்னேற மட்டும் முடியவில்லை. 2020 முதல் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிளே ஆப் வந்த அவர்கள், தோல்வியால் வெளியேறினர். 2023 ஆம் ஆண்டு பிளே ஆப் வாய்ப்பை தவற விட்ட ஆர்சிபி, இந்த சீசனில் மீண்டும் கம்பீரமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

அப்படி இருக்கையில் தான், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வந்த வேகத்தில் வெளியேறியது. இதே போல, மும்பை அணி 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை. இரண்டு முறை 10 வது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ், மற்ற இரண்டு முறை பிளே ஆப் முன்னேறியும் இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை.

இந்த இரண்டு அணிகளையும் விட தொடர்ச்சியாக சிறப்பாக ஆடும் சிஎஸ்கே, 2020, 22 மற்றும் 24 ஆகிய ஆண்டுகளில் பிளே ஆப் சுற்றுடன் வெளியேற, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று அசத்தி இருந்தது. இப்படி ஆர்சிபி, மும்பை மற்றும் சிஎஸ்கே என 3 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் நிச்சயம் இருக்கும் என்ற நிலையில், இந்த முறையும் அப்படி தான் நிகழ்ந்தது.

ஆனால், அதே வேளையில் இந்த 3 அணிகளும் இல்லாமல் ஐபிஎல் தொடரிலேயே முதல் முறையாக நடக்க போகும் ஒரு சம்பவத்தை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். அதாவது ஆர்சிபி, மும்பை மற்றும் சிஎஸ்கே என மூன்று அணிகளும், முதல் 3 இடங்களில் இல்லாமல் முடியப் போகும் சீசனும் இது தான். கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் என 3 அணிகள் மட்டுமே இருக்க, ஆர்சிபி சமீபத்தில் வெளியேறியதால் இந்த பொன்னான வாய்ப்பை 3 அணிகளும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts