விட்டுக் கொடுக்காமல் விடாமுயற்சி; போட்டியை சமன் செய்த இந்திய வீராங்கனை!!

சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் சற்று ஓங்கி உள்ளதாக காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றிகளை வாரிக் கொண்டு வருகின்றனர். இதனால் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

மேலும் நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஒருவர் டிராவில் போட்டியை முடித்தார். அதணை போல் இன்று மற்றும் ஒரு இந்திய வீராங்கனை போட்டியினை சமன் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது .

அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பெண்கள் ஏ அணியில் விளையாடிய கோனேரு ஹம்பி ஹங்கேரி வீராங்கனை தான் ஸ்ட்ராங் ஆட்டம் சமனில் முடிவடைந்தது. வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடிய இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி 48 வது நகர்வில் போட்டியை டிராவில் முடித்துக் கொண்டார். அவர் தோல்வி அடைவார் என்று அச்சத்தில் இருந்த நிலையில் சரியான யுக்தியை பயன்படுத்தி ஆட்டத்தை தமிழில் முடித்தார். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி கொடுக்கப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.