இந்தியா-மேற்கிந்திய தீவு மூன்றாவது ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றியையாவது பெறுமா வெஸ்ட்இண்டீஸ்?

சில நாட்களுக்கு முன்பு இந்தியா மேற்கொண்ட தென்ஆப்பிரிக்கா தொடர் அவ்வளவு சரியாக அமையவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த இந்திய அணி அதி தீவிர பயிற்சி மேற்கொண்டு. இந்த நிலையில் மேற்கத்திய நாடு இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறது.

இதில் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000 ஆவது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைத்தது.

அதேவேளையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எப்படியாவது மேற்கத்திய அணி வென்றால் தான் தொடரை கைப்பற்றும் முயற்சி இருக்கும் என்ற நோக்கத்தில் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது இருப்பினும்.

மேற்கத்திய அணியின் கேப்டன் கைரன் பொல்லார்டு இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து வரிசையாக தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிவிரைவில் மேற்கத்திய அணிகளின் விக்கெட்டுகளை வரிசையாக எடுத்தனர்.

இதனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது ஒருநாள் போட்டி கடைசி ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1 மணிக்கு மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...