இந்த இரு மாலைகள் போதும் !! மகாலட்சுமியின் அருள் உங்களுக்குதான்!!


c985797dd52f1fc543db6b07ad9dd905-1

சங்கு, உப்பு, வெள்ளி, பால், துளசி மாதிரியான சில பொருட்களில் மகாலட்சுமி வாசம் செய்வது அனைவருக்கும் தெரிந்ததுதான். நாம் சமையலில் பயன்படுத்தும் கிராம்பு மற்றும் ஏலக்காயிலும் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. நாம் சமையலுக்கு பயன்படுத்துவதால் இவற்றை நாம் சாதாரணமாக நினைக்கிறோம். கிராம்பும், ஏலமும் மூலிகை வகையை சார்ந்தது. மகாலட்சுமி தேவிக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் இவை அடங்கும்.

இக்காலத்தில் பணம் சம்பாதிப்பது என்பது எளிதானதல்ல! அப்படி பாடுபட்டு சேர்த்த பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்தாலும் சிலருக்கு பலவழிகளில் செலவழிந்துக்கொண்டே இருக்கும். பணம் வந்துக்கொண்டே இருந்தாலும், நிலையாய் வீட்டில் பணம் தங்காமல் மருத்துவ செலவு, வாகன பழுது, வீட்டு உபயோகப்பொருட்களின் பழுது என எதாவது செலவு வந்து சேர்த்து வைத்திருக்கும் பணத்தை கரைத்துக்கொண்டு போய்விடும். இதற்கு வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இல்லையென பெரியவர்கள் சொல்வார்கள். மகாலட்சுமியின் அருள் இருந்தால், வீட்டில் செல்வம் தங்கும்.

மகாலட்சுமியின் அருள் நம் வீட்டில் என்றும் நிலைத்திருக்க பல வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்றுதான் ஏலக்காய்,கிராம்பு மாலையை மகாலட்சுமிக்கு சார்த்தி வழிபடுவது.. அந்த வழிமுறையை பற்றி விரிவாய் பார்க்கலாம் வாங்க!

3bec22abf345da298ede024aa10fbc16-1

வெள்ளிக்கிழமை வீட்டை சூத்தம் செய்து காலை 6 – 7 மணிக்குள் அல்லது மதியம் 1 – 2 மணிக்குள் அல்லது இரவு 8 – 9 மணிக்குள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜைக்குரிய ஏற்பாடுகளை செய்தபின் குத்து விளக்கு ஒன்றை தனியே பூஜையில் வைத்து, விளக்கிற்கு மஞ்சள், குங்குமம், பூக்களைக்கொண்டு அலங்கரித்து, விளக்கின் பாதத்தை பூக்களால் சுற்றி அலங்காரம் செய்யவும். மல்லிகை மலர் கட்டாயம் இருக்கவேண்டும். பின்னர் 54 அல்லது 108 கிராம்பையும், அதே எண்ணிக்கையில் ஏலக்காயையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை ஊசி, நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து கொள்ளுங்கள். கிராம்பை பூ காட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டி கொள்ளுங்கள். நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல், காய்ந்த திராட்சை முத்துக்கள், மாதுளம் பழம் 1, நெல்லிக்கனிகள் 5 இவற்றை ஒரு தட்டில் வைத்து விளக்கின் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை-பாக்கு, பழம் வைத்து அதன் மீது 501 ரூபாய் காணிக்கை வைக்கவும். இந்த இரண்டு மாலைகளையும் விளக்கிற்கு சாற்றி விளக்கின் 5 முகங்களிலும் தீபமேற்ற வேண்டும். தீபம் ஏற்ற வேண்டிய நேரம் மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு நேரத்தில் செய்து கொள்ளலாம். தீபம் ஏற்றும்போது மகாலட்சுமிக்கு உகந்த எதாவது ஸ்லோகத்தை சொல்லலாம். இதுப்போல தொடர்ந்து 21 வாரங்கள் இந்த வழிபாட்டை முறையாக செய்து வருவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாய் கிட்டும்.  மாலைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மாலைகளின் நிறமும், மணமும் மாறாதவரை மாலைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்த பூஜையை வெள்ளிக்கிழமை செய்ய முடியாத நிலையில் பௌர்ணமியில் செய்யலாம். மகாலட்சுமி அருள் கிடைக்க முழு நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews