80, 90களில் ரஜினி, கமலையே கதற விட்ட ராமராஜன்… என்ன நடந்தது தெரியுமா?

மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த சாமானியன் படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் அந்தப் படத்திற்கான ஆடியோ, டிரைலர் சமீபத்தில் வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வலைப்பேச்சு சக்திவேல் ராமராஜன் பற்றியும், அவரது படங்கள் குறித்தும் இவ்வாறு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

80, 90 கால கட்டத்தை ஆட்டிப் படைக்கிறாங்க ரெண்டு பேரு. அவங்க ரஜினியும், கமலும் தான். அவங்களுக்கு இடையில கிராமத்து மனுஷனா, ரொம்ப எளிமையா சினிமாவுக்குள்ள நுழையறாரு. இவரு மக்கள் நாயகன்.

ராமராஜன் சினிமாவில் ஹீரோவாகணும்கறதுக்காகத் தான் மதுரையில் இருந்து சென்னைக்கே வருகிறார். டைரக்டராகத் தான் ஆரம்பிச்சார். ராமநாராயணன்கிட்ட அசிஸ்டண்ட். மண்ணுக்கேத்த பொண்ணு படத்துல வேலை பார்த்தார். நம்ம ஊரு நல்ல ஊரு படத்துல தான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சாரு. அப்படியே ஒவ்வொரு படமா போச்சு.

அவரு சினிமா கேரியரிலேயே மறக்க முடியாத படம் கரகாட்டக்காரன் தான். இந்தப் படம் ஒரு வருஷத்தையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது. அந்தப் படம் எல்லா சென்டர்களிலும் பெரிய அளவில் ஹிட். கமலும், ரஜினியுமே கரகாட்டக்காரன் படத்தோட வெற்றியைப் பார்த்து ஷாக் ஆகிட்டாங்களாம்.

Karakattakkaran
Karakattakkaran

ராமராஜன் படம் ரிலீஸாகும் போது ரஜினிக்குத் தெரிய வந்தால் அவரது படத்தோட ரிலீஸையேத் தள்ளி வைத்து விடுவாராம். அவருடைய படங்கள்ல நெகடிவ்வான விஷயங்கள் எதுவுமே இருக்காது. வில்லன் இருந்தாலும் கடைசியில் திருந்திடுவாரு. குடும்பம் குடும்பமா பார்க்குற மாதிரி தான் இருக்கும். 50 படம் கூட நடிக்கல. ஆனாலும் இவர் இந்தளவு சாதித்துள்ளார். சாமானியன் ரிலீஸானா அது 45வது படம்.

ராமராஜன் படங்களுக்கு டைட்டில் பெரிசாலாம் யோசிக்க மாட்டாங்க. ராசா ராசான்னு வரும். தங்கமான ராசா, ராசாவே உன்னை நம்பி, என்னப் பெத்த ராசான்னு வரும். இல்லன்னா ஊரு ஊருன்னு வரும். எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு காவல்காரன், ஊரு விட்டு ஊருவந்து… இப்படி எல்லாமே மண் சார்ந்த கதைகளா வரும்.

இதையும் படிங்க… ராமராஜன் படத்தை மிஸ் பண்ணினேன்… ரஜினி படத்தால எனக்கு நாலரை கோடி நஷ்டம்…!

இன்னொரு கொள்கையை வச்சிருந்தாரு. புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளைப் படங்களில் வைக்க மாட்டாராம். இந்தக் காலத்து ஹீரோக்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. அவர் படங்களில் வில்லனாக நடித்தது இல்லை. 2 ஹீரோ படங்களிலும் அவர் நடிக்கவில்லை. தமிழ் தவிர வேறு மொழிகளில் நடித்தது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews