“உன் படத்துக்கு மியூசிக் போட மாட்டேன் போ..“ முதல் படத்திலேயே பார்த்திபனை நிராகரித்த இளையராஜா.. காரணம் இதான்

ஒரு படைப்பாளி என்பவருக்கு முழு தகுதியும் கொண்ட சினிமா பிரபலம் யாரென்றால் அது பார்த்திபன் தான். நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் கலக்கி சினிமாத்துறைக்கு பல வித்தியாசமான முயற்சிகள் பலவற்றைக் கொடுத்து சில தோல்விகளையும் கொடுத்திருக்கிறார். இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றி பின் ‘புதிய பாதை‘ யாக தனது முதல் படத்தைக் கொடுத்து வெற்றி பெற்றார். தனது குருவிடம் பல விஷயங்களையும் கற்றுக் கொண்டார்.

புதிய பாதை படத்தில் எதைப் பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்படாத ஒரு கெட்டவன் ஒரு பெண்ணால் நல்லவனாக திருந்து வாழ்கிறான். அப்போது அவன் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதுதான் கதை. சாதாரண கதை என்றாலும் அதற்கு தனது ஸ்டைலில் திரைக்கதை அமைத்து அவரே நடித்திருந்தார்.

புதிய பாதையைத் தொடர்ந்து இவர் இயக்கிய சுகமான சுமைகள், புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ்புல், குடைக்குள் மழை போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. உள்ளே வெளியே, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு வசூலை பெற்றுத் தந்தது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் என்கிற படத்தையும் எடுத்து இந்திய தமிழ் சினிமாவை கவனிக்க வைத்தவர். ஒருபக்கம் தனது ஸ்டைல் படங்கள் மற்றொரு பக்கம் கமர்ஷியல் ஹீரோவாக நிறைய படங்களிலும் பார்த்திபன் நடித்திருக்கிறார்.

நடிகர் திலகம்ன்னா சும்மா இல்லை.. ஒரு நாள் கூட தவற விடாத பயிற்சி..!

பொதுவாக 90களில் முதல் படம் இயக்கும் எல்லா இயக்குனர்களுக்கும் தங்களின் முதல் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். பார்த்திபனுக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால், அப்போது அவரின் குரு பாக்கியராஜ் இளையராஜா மீது இருந்த கோபத்தில் சொந்தமாக இசையமைக்க துவங்கிவிட்டார். இளையராஜாவை பார்த்திபன் பார்க்க சென்றபோது ‘நீயும் ஆர்மோனியத்த வச்சி மியூசிக் போட வேண்டியதுதான.. உன் படத்துக்கு நான் மியூசிக் போட மாட்டேன் போ ’ என கத்தி இருக்கிறார் இளையராஜா.

அதன்பின் சந்திரபோஸை இசையில் புதிய பாதையை உருவாக்கினார் பார்த்திபன். படமோ சூப்பர் ஹிட். இதனையடுத்து இரண்டாவது படமாக ‘பொண்டாட்டி தேவை’ படத்தை எடுத்தார் பார்த்திபன். அப்போது பார்த்திபனை தன்னை வந்து சந்திக்கும் படி இளையராஜா சொல்ல அவரும் போய் பார்த்திருக்கிறார். ’நான் இல்லாம படம் எடுக்க மாட்டேன்னு சொன்னியே.. இப்ப நான் இல்லாமலும் படத்தை எடுத்து நீ ஹிட்டு கொடுத்திருக்கே.. இது உனக்கு புரியனும்னுதான் நான் மியூசிக் போடல’ என சொல்லி இருக்கிறார் இளையராஜா.

அதன்பின் பார்த்திபன் இயக்கி நடித்த பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, இவன் ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews