என்னோட 45 வருஷ மியூசிக்ல இப்படி ஒரு.. இளையராஜாவை உச்ச கட்ட டென்ஷன் ஆக்கிய மிஷ்கின்.. இந்த ஒரு பாட்டுக்குத்தானா?

உலகத் திரைப்படங்களைப் பார்த்தும், பல நூல்களைப் படித்தும் ஒரு சினிமா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இலக்கணம் வகுத்து திரைப்படங்களை எடுப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவருடைய படைப்புகள் அனைத்தும் மனிதர்களின் உணர்வுகளோடு இழையோடும். இசை உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும். கதை மாந்தர்கள் வசனங்களைக் காட்டிலும் உடல்மொழியில் பேசுவார்கள்.

ஹிட் படங்கள் என்பதைத் தாண்டி ஒரு படைப்பாளனாக இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய திறமையை எப்பொழுதுமே திரையில் காட்டி வருகிறார். இவருடைய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ போன்ற படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருப்பார். இளையராஜாவை அப்பா என்று அழைக்கும் அளவிற்கு அவர்மீது உரிமை எடுத்து, அவரின் தீவிர ரசிகனின் பார்வையில் தன்னுடைய படைப்புகளுக்கு இசையை வாங்குபவர் மிஷ்கின்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் எழுதிய பாட்டில் இத்தனை அர்த்தமா? நடுத்தர வர்க்கத்தின் குரலாக ஒலித்த பேட்டராப் பாடல்

அந்த அளவிற்கு அவரின் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்குநர் மிஷ்கின் தனது சைக்கோ படத்திற்காக இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இனி அவருடன் எந்தப் படங்களிலும் பணியாற்றப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார். அப்படி என்னதான் ஆச்சு தெரியுமா?

‘சைக்கோ‘ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ‘உன்ன நெனச்சு நெனச்சு‘ பாடலுக்காக இளையராஜாவிடம் காட்சியைச் சொல்லி டியூன் கேட்டிருக்கிறார் மிஷ்கின். இளையராஜாவும் வெவ்வேறு டியூன்களைப் போட எதிலும் திருப்தி இல்லாமல் இருந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 6 நாட்களாக இதே கதை தொடர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் இளையராஜா கடுப்பாகி 45 வருஷமாக இசையமைக்கிறேன்.. யாரும் இப்படி என்ன வேலை வாங்கினது இல்ல.. அப்படி என்னதான் வேணும் என்று கேட்க,  மிஷ்கினோ.. வள்ளியில் வரும் என்னுள்ளே பாடல், ஹேராம் படத்தில் வரும் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி‘ போன்ற இரண்டு பாடல்களுக்கும் இடையில் வருவது போல் ஒரு டியூன் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

பின்னர் ஒருவழியா இளையராஜாவும் டியூன் போட்டுத்தர இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் தான் பாட வேண்டும் என்று கேட்டுள்ளார் மிஷ்கின். ஆனால் இளையராஜாவோ இசைக்கு யாரைப் பாட வைக்கலாம் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று வேறொரு பாடகரை வைத்து பாடலைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் மிஷ்கினோ பின்னர் சித் ஸ்ரீராமை வைத்து பாடல் பதிவு செய்திருக்கிறார். மேலும் சைக்கோ திரைப்படத்திலும் இதனையே பயன்படுத்த கோபத்தின் உச்சிக்கே சென்ற இளையராஜா இனி உன் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்ற மிஷ்கினிடம் கோபமாகக் கூறியிருக்கிறார். மேலும் என்னை அப்பா என்றும்  அழைக்காதே என்றும் கூற மிஷ்கின் இளையராஜாவின் ஸ்டுடியோ வாசலிலேயே கண்ணீர்  சிந்தியிருக்கிறார்.

இப்படியாகத்தான் இளையராஜாவுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன்பிறகு அவர்கள் இருவரும் சேரவில்லை. மேலும் டெவில் படத்தின் மூலமாக தானே இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...