மழை வர வாய்ப்பு.. ரிசர்வ் டேயும் கிடையாது. இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் என்ன நடக்கும்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதி போட்டி அமெரிக்க நேரப்படி இன்று நடைபெற இருக்கும் நிலையில் மைதானத்தில் தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது,

இந்த போட்டியில் மழை பெய்தால் ரிசர்வ் டே கிடையாது என்பதால் மறுநாள் இந்த போட்டியை நடத்த முடியாது. ஆனால் அதே நேரத்தில் வழக்கமான போட்டி நேரத்தை விட கூடுதலாக 250 நிமிடங்கள் இந்த போட்டிக்காக அளிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதாவது 4 மணி நேரம் இந்த போட்டிக்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய நேரப்படி நாளை காலை 10:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டி மழை பெய்தாலும் காத்திருந்து போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை மழை பெய்து ஓவர் குறைக்கப்படும் நிலை வந்தால் என்ன என்பதை தற்போது பார்ப்போம். அமெரிக்க நேரப்படி மதியம் 12:15 வரை மழை பெய்தால் 19 ஓவர் போட்டியாக நடக்கும் என்றும் அல்லது குறைந்தபட்சம் பத்து ஓவர் போட்டியாவது நடத்தப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் நேரம் அளித்தும் மழை நிற்கவில்லை என்றால் போட்டி ரத்து செய்யப்படும் என்றும் அவ்வாறு போட்டி ரத்து செய்யப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்து இருக்கும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் . அப்படி நடந்தால் இந்திய அணி தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இறுதி போட்டிக்கு தென்னாபிரிக்க அணி தகுதி பெற்ற நிலையில் மழை பெய்து இந்திய – இங்கிலாந்து போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதி போட்டியில் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts