என் மகளின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றி விட்டேன்… மகிழ்ச்சியில் கொட்டாச்சி…

காமெடி நடிகர் கொட்டாச்சி ‘யூத்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘காவிய தலைவன்’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். இவர் காமெடி நடிகர் விவேக்குடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் தோன்றியுள்ளார். இது மட்டுமல்லாமல் 2020 ஆம் ஆண்டு வறண்ட விழிகள் என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபலமடைந்ததை விட இவரது மகளான மானஸ்வி கொட்டாச்சி குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடித்து மிக பிரபலமானார். நடிகர் கொட்டாச்சியின் மகளா இது என்று அனைவரும் கூறும் அளவிற்கு புகழ் பெற்றார். வசனங்களை அவ்ளளவு தெளிவாக பேசி எதார்த்தமாக நடிப்பவர் குழந்தை மானஸ்வி கொட்டாச்சி.

மானஸ்வி கொட்டாச்சி 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். பின்னர் ‘தர்பார்’, ‘சித்திரை செவ்வானம்’, ‘மாமனிதன்’, ‘டிடி ரிட்டன்ஸ்’, ‘சந்திரமுகி 2’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கொட்டாச்சி தனது மகளின் பிறந்தநாள் பரிசாக ரூ. 13 லட்சம் மதிப்பிலான காரை பரிசாக கொடுத்துள்ளார். அதைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என் மகளுக்கு கார் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, வெளிய போகும் போதும், பெரிய விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் நாமளும் சீக்கிரம் கார் வாங்கணும் அப்பா அப்படினு பீல் பண்ணுவா, அவள் ஆசையை நிறைவேற்ற இவ்வளவு நாளா ஓடிக் கொண்டிருந்தேன். ஆண்டவன் அருளாலே இந்த வருடம் என் மகளின் பிறந்தநாளில் அவளது கனவை நிறைவேற்றிவிட்டேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி மானஸ்வி கொட்டாச்சி கூறுகையில், இது எனக்கு மிக பெரிய சர்ப்ரைஸ் தான். அப்பாவும் அம்மாவும் எனக்கு பிடிச்ச பிளாக் கலர்ல கார் வாங்கிட்டாங்க. எனக்கு எல்லா விதத்திலயும் எனக்கு சப்போர்ட்டிவா அவங்க இருகாங்க. எல்லா ஜென்மத்திலேயும் அவங்கதான் எனக்கு அம்மா அப்பாவ கிடைக்கும்னு நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். சீக்கிரமா கார் ஓட்ட கத்துக்கிட்டு நான் இந்த காரில் அம்மா அப்பாவை கூட்டிச் செல்வேன் என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...