இப்படித்தான் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனாரா? சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த 1980!

தமிழ் சினிமாவில் தியாராஜபாகவதர், பி.யூ. சின்னப்பா காலத்திற்குப் பின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எம்.ஜி.ஆர் தக்க வைத்துக்  கொள்ள அதன்பின் அந்த இடத்தை நிரப்ப 20 வருடங்களுக்கு மேல் ஆயிற்று. ரஜினி என்ற கலைஞன் திரைத்துறைக்கு வராவிட்டால் அந்த இடம் வெற்றிடமாகவே போயிருக்கும்.

ரஜினி எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார் தெரியுமா? 1975ல் தமிழ் சினிமாவிற்கு முக்கியமான வருடம். அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆருக்கு ‘நாளை நமதே’, ‘பல்லாண்டு வாழ்க’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘இதயக்கனி’ ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. இரண்டு படங்கள் ஹிட்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 8 படங்கள் ரிலீசாக அதில் மூன்று படங்கள் ஹிட். அப்போது குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோவான அறிமுகமான கமல்ஹாசன் பத்துப் படங்களில் நடித்திருந்தார். 4 படங்கள் ஹிட். இதற்கு நடுவே அந்த வருடம் ஒரு புதுமுக நடிகரும் அறிமுகமானார். அவர்தான் ரஜினி.

1975-ல் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினி. அந்த வருடம் அந்தப் படம் ஒன்று மட்டுமே. அதன்பிறகு 1976-ல் மூன்று முடிச்சு என்ற ஒரு படம் மட்டுமே ரிலீஸ். அந்த இரண்டு படங்களிலும் வில்லத்தனத்தில் தன்னுடைய திறமையை  நிரூபிக்க 1978-ல் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் எனும் மகா கலைஞனை சினிமா உலகிற்கு அளித்தது. யதார்த்த சினிமாவை படம் பிடிப்பதில் வல்லவரான இயக்குநர் மகேந்திரன் படைப்பில் வெளியான முள்ளும் மலரும் திரைப்படம் ரஜினிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பொங்கல் வின்னர் யாரு?.. லால் சலாம், அயலான், அரண்மனை 4 படங்களுக்கு ஆப்படித்த கேப்டன் மில்லர்!

படத்தைப்பார்த்துவிட்டு, ‘உன்னை அறிமுகப்படுத்தியதற்கு எனக்கு பெருமையா இருக்கு’ என்று இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் நெகிழ்ந்தார். அடுத்த மூன்று வருடங்களில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டும். அந்த காலகட்டத்தில்தான் காயத்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், தப்பு தாளங்கள், அவள் அப்படித்தான், ஆறிலிருந்து அறுபதுவரை, ஜானி போன்ற ரஜினியின் தரமான படங்கள் வெளிவந்தன.

Mulum malarum

எதிர்பாராத விதமாக 1980ல் வந்த பில்லா சூப்பர்ஹிட். ரஜினியின் திரையுலக போக்கை மாற்றிய படம் ‘பில்லா’ தான். அதற்கு கிடைத்த வரவேற்பும், வசூலும் அதற்குமுன் எம்ஜிஆர் படங்கள் சிலவற்றுக்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம்.

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்? சினிமா ஹீரோ சமையல் ஜாம்பவானாக மாறிய கதை

அதே 1980ல் அவரது மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ‘முரட்டுக்காளை’ வெளிவந்தது. அதோடு திரையுலகில் அவரது பாதை முழுவதுமாக மாறியது. எம்ஜிஆருக்கு பின் திரையில் ‘வெகுஜன நாயகன்’ இடத்தை நிரப்ப ரஜினிதான் சரியான நடிகர் என்று தயாரிப்பாளர்கள் கணித்தார்கள்.

எந்த பாத்திரத்திலும் தான் நடிக்க முடியும் என்று நிரூபித்த ரஜினி, அந்த காலக்கட்டத்தில் தினம் இரு வேறு படங்களுக்கு 2 கால்ஷீட்கள் கொடுத்து நடித்தார். 16 மணி நேர படப்பிடிப்பு, ஸ்டுடியோவிலேயே தூக்கம், வருடத்திற்கு நான்கு மொழிகளிலும் 15 படங்கள், ஷூட்டிங்கிற்கு ஒருநாளும் நேரம் தவறாத தொழில் பக்தி என நுழைந்த 5 ஆண்டுகளில் தமிழ் திரையுலகிற்கே ரஜினி முதல்வனானது இப்படித்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.