காரின் முன் விழுந்து சினிமா சான்ஸ் கேட்ட எஸ்.ஜே சூர்யா!

சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் எஸ்.ஜே. சூர்யா. சினிமா மீதிருந்த பிரியத்தால், 10ம் வகுப்பு படித்து முடித்ததும், சென்னையில் வந்து சினிமா வாய்ப்பினை தேட வீட்டில் சொல்லாமல் ஓடி வந்து உள்ளார்.

இயல்பு நிலவரம் தெரியாதா வெகுளிப்பையனான எஸ்.ஜே. சூர்யா. நடிகர் சிவாஜியின் வீட்டிற்கு சென்று, வாட்ச்மேனிடம் சிவாஜியைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுள்ளார். அதற்கு வாட்ச்மேன், ஓரமாக நில்லு சார் வருவார் பார்த்துட்டு போ என்று கூறி வாசலில் நிற்க வைத்துள்ளார்.

அப்போதுதான் தெரிந்துள்ளது சினிமாவில் யாரையும் அப்படி நினைத்ததும் பார்க்க முடியாது என்று. சொல்லாமல் ஓடிவந்த எஸ்.ஜே சூர்யாவை அவருடைய வீட்டிலிருந்து வந்து ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பள்ளிப் படிப்பை முடித்ததும், பெற்றோரின் ஆசைக்காக சென்னையில் உள்ள, லயோலா கல்லூரியில் படிப்பதற்காக வந்துள்ளார். சினிமா மீதே முழு நாட்டமும் இருக்க கல்லூரி படிப்பினை முடித்ததும், சினிமாவில் சேர வேண்டுமென முயற்சி செய்ய ஆரம்பித்துள்ளார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனாராக வாய்ப்புக் கேட்க சென்றுள்ளார். ஏற்கனவே பாரதிராஜாவிடம் 10 பேர் அசிஸ்டெண்ட் ஆக இருக்க எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த பாரதிராஜாவின் கார் முன் விழுந்து, சான்ஸ் கேட்டுள்ளார். நீண்ட முயற்சிக்கு பின் பாரதிராஜாவின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு அவருடைய திரை நுணுக்கங்களை பார்த்து தெரிந்து கொண்டுள்ளார். இதுவே பின்னாளில்இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பதற்கு உறுதுணையாக இருந்ததுள்ளது.

அதே சமயத்தில் பாக்யராஜின் உதவியாளராக பணிபுரிவதற்கான வாய்ப்பினையும் பெற்றுள்ளார். இதன் பிறகே அவருடைய வாழ்க்கைப் பயணம் முக்கிய திருப்பு முனையை சந்தித்தது. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக சேர்ந்த, எஸ்.ஜே சூர்யா அஜித்திற்கு அறிமுகமானர். அப்போது எஸ்.ஜே சூர்யாவின் திறமையை கவனித்தார் அஜித். மீண்டும் ‘உல்லாசம்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா பணிபுரிந்துள்ளார். அதில் அஜித், விக்ரம் மற்றும் ரகுவரன் நடித்திருப்பார்கள். உதவி இயக்குனராக திறமையாக பணிபுரியும் எஸ்.ஜே.சூர்யாவிடம் அஜித் கதை கேட்க சம்மதித்துள்ளார்.

sj surya 1

கதை பிடித்துப் போகவே தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியை, எஸ்.ஜே.சூர்யாக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் அஜித். அப்படித்தான் ‘வாலி’ படம் உறுவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, தளபதி விஜயுடன் ‘குஷி’ எனும் சூப்பர் ஹிட் படத்தை உருவாக்கினார்.

அதன்பின் 2004ல் அவரே ‘நியூ’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஒருசில படங்கள் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றன. இருப்பினும் தொடர் தோல்விகளை சந்தித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இறைவி’ படத்தில் நடித்து பிரபலமானர். அதன் பின் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன்மூலம், நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். சமீபத்தில், விஷாலுடன் நடித்து வெளியான ‘மார்க் ஆண்டனி’ அவருக்கு நல்ல படமாக அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews